இந்திய மொழி சார்ந்த படங்களுக்கு மத்திய அரசு விருது வழங்கி வருகிறது. அதன்படி 2019ம் ஆண்டுக்கான விருது பட்டியலில் தமிழ் திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இயக்குநரும் நடிகருமான பார்த்திபனின் கடந்த ஆண்டு ஒத்த செருப்பு (சைஸ் நம்பர் 7.) என்ற படத்தை இயக்கி இருந்தார். ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது மத்திய அரசின் விருதுக்கு ‘ஒத்த செருப்பு’ தேர்வாகி உள்ளது. இதேபோல் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய ஹவுஸ் ஓனர் என்ற தமிழ் திரைப்படத்திற்கு விருது வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் மத்திய அரசின் விருதுக்கு ‘ஒத்த செருப்பு’ தேர்வாகி உள்ள நிலையில், திமுக தர்மபுரி எம்பி, இந்த செய்தியை குறிப்பிட்டு அண்ணனுக்கு பாஜக ல ஒரு சீட்டு பார்சல்ல்ல்ல்.. என்று நடிகர் பார்த்திபன் படைப்புக்கு கிடைக்கும் அங்கீகாரத்தை கொச்சை படுத்தும் நோக்கில் நக்கல் செய்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது, இதனை தொடர்ந்து திமுக எம்பியின் பொறுப்பற்ற இந்த செயலுக்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து நடிகர் பார்த்திபன் தனது டிவீட்டர் பக்கத்தில், ஏற்கனவே இந்தியன் பனோரமாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களை மத்திய அரசின் செய்தி அறிக்கை வெளியிட்டதை ’தேசிய விருதா’ய் ஊடகங்கள் கொண்டாடியதை புரிந்துக் கொள்ள முடிந்தது. உலகெங்கும் பாராட்டுக்கள்.
மணியோசை முன்னரே வந்துவிட்டது,யானை வரும் பின்னே! பின்னே வேறென்னச் சொல்லி சமாளிப்பது .? என தனக்குரிய பாணியில் விளக்கம் கொடுத்துள்ளார்.
நடிகர் பார்த்திபன் கொடுத்த விளக்கம் திமுக எம்பி செந்தில்குமாருக்கு தான் என்றும்,இதற்கு நிகழ்ச்சி ஒன்றில் மு.க. ஸ்டாலின் பேசுகையில் “யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே” என்ற பழமொழியை “யானை வரும் முன்னே, மணியோசை வரும் பின்னே” என தவறாக கூறினார். அவர் பேசியது ட்விட்டரில் ட்ரெண்டாகி #ஸ்டாலின்_பழமொழிகள் என்ற ஹேஸ்டக்கில் இந்திய அளவில் முதல் இடத்தை பிடித்தது, ஆகையால் இதை மனதில் வைத்து தான் பார்த்திபன் மணியோசை முன்னரே வந்துவிட்டது,யானை வரும் பின்னே! என நக்கலாக பதிலளித்துள்ளார் என கூறப்படுகிறது.