அதிமுகவுடன் திமுக எம்எல்ஏ மூர்த்தி கள்ள தொடர்பு.! மதுரை கிழக்கு தொகுதியில் போட்டியிட உதயநிதி ஆதரவாளருக்கு வாய்ப்பு.!

0
Follow on Google News

மதுரை கிழக்கு தொகுதி திமுக சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்து வருகின்றவர் மூர்த்தி, இவர் மதுரை வடக்கு மாவட்ட திமுக செயலாளராகவும் உள்ளார், இந்நிலையில் இவர் அதிமுகவுடன் கள்ள தொடர்பில் இருத்து வருவது குறித்து திமுக தலைமைக்கு தொடர்ந்து புகார் சென்று கொண்டிருந்த நிலையில், திமுக தலைமையின் உத்தரவின் பெயரின் மதுரை கிழக்கு தொகுதியில் போட்டியிட உதயநிதியின் தீவிர அதிரவலரான அண்ணாமலை என்கிற இளைஞனை இப்போதே தேர்தல் களத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தற்போது மதுரை கிழக்கு தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்து வரும் மூர்த்தி கட்சியின் இணைந்து பணியாற்றாமல் தன்னிச்சையாக செயல்பட்டு வருவதாக திமுகவினர் மத்தியில் குற்றசாட்டு எழுந்து வருவது குறிப்பிடதக்கது, மேலும் தனது கட்சி நிர்வாகிகளை தகுந்த மரியாதையுடன் நடத்துவது கிடையாது, பல சமயங்களில் கட்சி நிர்வாகிகளை சாதி பெயரை கூறி திட்டுவது, ஆபாச வார்த்தைகளால் திட்டுவது என்கிற புகார் திமுக நிர்வாகிகளால் பலமுறை திமுக தலைமைக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த பத்து வருடமாக திமுக ஆட்சியில் இல்லையென்றாலும் திமுக எம்எல்ஏ மூர்த்தி ஆளும் கட்சி எம்எல்ஏ போன்றே வலம் வருகிறார், இதற்கு காரணம் அதிமுக உடன் அவருக்கு இருக்கும் கள்ள உறவு தான் என்கின்றனர் திமுகவினர், மதுரையில் சட்டமன்ற உறுப்பினராக இருக்க கூடிய அதிமுக மாவட்ட செயலாளர் ஒருவருடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் திமுக எம்எல்ஏ மூர்த்தி தனக்கு தேவையான அணைத்து உதவிகளையும் அவர் மூலம் பெற்று வருகிறார், இதனால் அவருடைய பினாமி பெயரில் இயங்கும் கல் குவாரி, புளு மெட்டல் அணைத்து எந்த தடையின்றி நடைபெறுகிறது.

கடந்த 2017-ம் ஆண்டு வண்டி பாதையை ஆக்கிரமித்து கல் குவாரி நடத்திய திமுக எம்எல்ஏ மூர்த்திக்கு எதிராக அந்த பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர், அப்போது எம்எல்ஏ மூர்த்திக்கு ஆதரவாக மதுரை கோட்டாட்சியராக இருந்த பெண் அதிகாரி ஒருவர் அலங்காநல்லூர் கூட்டுறவு சக்கரை ஆலை நிர்வாக இயக்குனராக மாற்றப்பட்டார், ஆனால் தற்போது மீண்டும் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவராக பொறுப்பேற்றுள்ளார், இதன் பின்னனியில் மூர்த்தியின் சிபாரிசின் பெயரின் அதிமுக எம்எல்ஏ உதவியுடன் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து கடந்த உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக சில இடங்களில் வெற்றி பெற மூர்த்தி உதவி செய்ததாக கூறப்படுகிறது, மேலும் தனக்கு அனைத்து வகையிலும் உதவி செய்துவரும் அதிமுக எம்எல்ஏவும் அதிமுக மாவட்ட செயலாளராக இருக்க கூடிய அந்த முக்கிய புள்ளி வரும் சட்டமன்ற தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டி வரும் நிலையில், தற்போது திருப்பரங்குன்றம் திமுக எம்எல்ஏ வாக இருக்கும் சரவணனை தோற்கடிக்கப்பட்டு அதிமுக சார்பில் போட்டியிட கூடிய தனது கூட்டாளியை வெற்றி பெற செய்ய திரைமறைவில் பல வேலையை மூர்த்தி எம்எல்ஏ செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக திமுக தலைமைக்கு ஆதாரத்துடன் புகார் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதியின் தீவிர ஆதரவாளரான திருமோகூர் ஊராட்சி தலைவர் அண்ணாமலை வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மதுரை கிழக்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடுவார் என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர், மதுரை கிழக்கு தொகுதியை சேர்ந்த திமுக முக்கிய நிர்வாகிகள் தற்போது அண்ணாமலை பின்னால் அணிவகுக்க தொடங்கியுள்ளனர்.

அண்ணாமலை மாவட்ட ஐடி பிரிவு பொறுப்பாளராக இருக்கின்றார், இவருடைய தந்தை ரகுபதி திமுக ஒன்றிய செயலாளராக இருந்து வருகிறார், ரகுபதி கடந்த சட்டமன்ற தேர்தலில் மேலூர் தொகுதியில் போட்டியிட்டது குறிப்பிடதக்கது, இந்நிலையில் இம்முறை ரகுபதி அல்லது அவருடைய மகன் அண்ணாமலை ஆகிய இருவரில் ஒருவர் மதுரை கிழக்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடுவார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து அண்ணாமலை தற்போது இருந்தே மதுரை கிழக்கு தொகுதி சட்டமன்ற தேர்தல் பணியை தொடங்கியிருப்பது திமுக தலைமையின் உத்தரவின் பெயரில் தொடங்கியிருக்க வேண்டும், ஆகையால் உதயநிதியின் ஆதரவாளரான அண்ணாமலை தேர்தலில் போட்டியிடுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றது என்கின்றனர் திமுக வட்டாரங்கள்.