கீழ்த்தரமான அரசியல் செய்வதை திமுக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வரமாறு:- மறைந்த அமைச்சர் துரைக்கண்ணு மரணத்தை கொச்சை படுத்துவது என்பது ஒரு கீழ்த்தனமான அரசியல்.திமுகவை பொறுத்தவரை கீழ்தரமாக போய்விட்டது என்பதற்கு இதேவிட வேறு உதாரணம் நிச்சயமாக இருக்க முடியாது.அவர்களின் கட்சியே அப்படிதான். கீழ்தரமாக , நாகரீகமற்ற அரசியல் செய்வதுதான் வழங்கமான அரசியலாக இருக்கிறது. உதாரணத்திற்கு 1984 ம் ஆண்டு சட்டமன்றத்திற்கு பொதுதேர்தல் நடக்கிறது.
பொதுதேர்தல் நடக்கும்போது புரட்சிதலைவர் அமெரிக்காவில் சிகிச்சைபெற்றுவருகிறார்.தமிழ்நாடு முழுவதும் புரட்சித்தலைவர் நலமோடு திரும்பி வருவார் என்றும் நல்ல ஆட்சியை தொடர்ந்து தருவார் என்றும் 100 ஆண்டுகள் வாழவேண்டும் என்று பட்டிதொட்டி எல்லாம் பிரார்த்தனை செய்தநிலையில்,அப்போது கருணாநிதி எதிர்கட்சியில் இருந்தபோது என்னுடைய 40 ஆண்டுகால நண்பர் திரும்பி வரட்டும்.திரும்பி வந்தவுடன் அவரிடம் ஆட்சியை அளித்துவிடுகிறேன் என்று தெரிவித்தார்.இதுபோன்ற கீழ்த்தரமான அரசியல் செய்பவர்கள்தான் திமுகவினர்.
மருத்துவமனையில் இருந்தவர்களை பற்றியும்,இறந்தவர்களை பற்றியும் அவர்களை வைத்து அரசியல் செய்வது என்பது திமுகவின் கீழ்த்தரமான அரசியல்.மரணத்தை கொச்சைப்படுத்துவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.ஸ்டாலின் அறிக்கை பொதுமக்களால் அறுவெறுக்கதக்க விஷயமாகதான் பார்க்கப்படும்.இதே நிலையை அவர்கள் தொடர்ந்து கடைபிடித்தால் முழுவதுமாக அவர்கள் புறக்கணிக்கப்படும் நிலை ஏற்படும்.
மறைந்த தலைவர்கள் குறித்து பொதுவாக பேசக்கூடாது.இதுதான் பண்பாடு.புரட்சிதலைவர்,புரட்சி தலைவி இறந்துவிட்டார்கள்.அவர்களை கீழ்தரமாக ,மோசமாக முசொலி செல்வம் தன்னுடைய குடும்ப பத்திரிக்கையான முரசொலியில் எழுதுகிறார் என்றால் அதனை மஞ்சள் பத்திரிக்கை என்று சொல்லலாம்.ஏற்கனவே அந்த மஞ்சள் பத்திரிக்கையை நமது கட்சியினர் யாரும் படிப்பதில்லை என்ற கருணாநிதியின் கருத்து பிரச்சனையானது.
அந்த மஞ்சள் பத்திரிக்கையில் இதுபோன்ற செயல்கள் தொடர்ந்து இடம்பெற்றால் கழகம் வேடிக்கை பார்க்காது.கழக தொண்டர்கள் திரண்டு எழுந்தால் நிச்சயமாக மஞ்சள் பத்திரிக்கை வெளிவராத நிலையை ஏற்படுத்துவார்கள்.திமுக தலைவரின் குடும்பம் பாதாளத்திற்கு போய்விட்டது.எழுந்திருக்க முடியாத நிலையில் புரட்சி தலைவரின் கையை,காலை பிடித்து படம் நடித்து தாருங்கள் என்று மன்றாடி கேட்டுக்கொண்டதன் காரணமாக எங்கள் தங்கம் என்ற படத்தை புரட்சி தலைவரும்,அம்மாவும் எந்தவித ஊதியமும் வாங்காமல் நடித்து அந்த குடும்பம் கடனில் இருந்து மீள்வதற்கு யார் காரணம்.புரட்சி தலைவரும்,அம்மாவும்தானே காரணம்.அந்த நன்றி கொஞ்சமும் இல்லாமல் திமுகவை சேர்ந்த முரசொலி செல்வமும்,ஸ்டாலினும் அவர்களுடைய பத்திரிக்கையில் எழுதுகிறார்கள் என்றால் இதை விட நன்றிகெட்ட செயல் உலகத்தில் எங்கும் இருக்க முடியாது.
நிச்சயமாக புரட்சிதலைவரின் ஆத்மாவும்,புரட்சி தலைவியின் ஆத்மாவும் மன்னிக்காது. எழுதுவதை நிறுத்தாவிட்டால் நமது அம்மா பத்திரிக்கையில் உங்களுடைய வண்டவாளங்கள்,தண்டவாளங்களை மானம் கப்பல் ஏறும்வரை நாங்கள் செய்வோம்.இதோடு இதனை நிறுத்திக்கொள்ளவேண்டும். நிறுத்தவில்லை என்றால் விளைவுகள் கடுமையாக இருக்கும்.மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்துவது எந்த வகையில் நாகரிகமான அரசியல்.மீண்டும் அவர்கள் தொடர்ந்தால் எங்களுடைய நமது அம்மா பத்திரிக்கையில் அவர்கள் குடும்பம் குறித்து தொடர்ந்து வரும்.இவ்வாறு அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.