திமுக அரசின் கையாலாகாத தனம்.. வெள்ளை அறிக்கை மூலம் வேடிக்கை காட்ட முயற்சி.! டாக்டர் கிருஷ்ணசாமி தாக்கு..

0
Follow on Google News

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று வெள்ளை அறிக்கையை வெளியிட்டார், தேர்தலுக்கு முன்பு தேர்தல் பிரச்சாரத்தின் போது, திமுக ஆட்சிக்கு வந்தால், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000, பெட்ரோல் விலை ரூ.5 டீசல் விலை ரூ.4 குறைக்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்திருந்த நிலையில் மக்கள் மத்தியில் இன்று வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கை முக்கியத்துவம் பெற்றிருந்தது. நிதி அமைச்சர் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில்.

தமிழகத்தில் தலா ஒரு குடும்பத்துக்கும் 2 லட்சத்து 63 ஆயிரத்து 976 ரூபாய் பொது சந்தாக் கடன் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு வரவேண்டிய நிதி 33 சதவீதம் குறைந்துள்ளது. அதிமுக ஆட்சியில் டாஸ்மாக் வருமானம் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் பல ஆண்டுகளாக மோட்டார் வாகன வரி உயர்த்தப்படாமலேயே உள்ளது. பிற மாநிலங்களைவிட தமிழகத்தில் மோட்டார் வாகன வரி குறைவாக உள்ளது. மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்திக்கு ஏற்ப வரியை வசூலிக்காமல் இருப்பது சமூக நீதிக்கு எதிரானது.

பூஜ்ய வரி என்பது ஏமாற்று வேலை. அதனால் பயனடைவது பணக்காரர்கள் மட்டுமே, ஏழைகள் அல்ல. ஒரு யூனிட் மின்சாரம் வாங்கி விநியோகிப்பதில் மின்வாரியத்துக்கு ரூ.2.36 இழப்பு ஏற்படுகிறது. அதேபோல், போக்குவரத்துத்துறை நிர்வாகத்தை உடனடியாக சீரமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு கி.மீ.,க்கும் அரசு பேருந்துகளை இயக்க ரூ.59 நஷ்டம் ஏற்படுகிறது. மின்சார வாரியம், போக்குவரத்து துறையின் கடன் மட்டும் ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் உள்ளது. தமிழக அரசு வாங்கிய கடன்களுக்காக ஒரு நாளைக்கு ரூ.87 கோடி வட்டி செலுத்தி வருகிறது என நிதியமைச்சர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் வெள்ளை அறிக்கை வெளியான பின்பு திமுக தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா என்கிற குழப்பம் மக்கள் மத்தியில் உருவாகி உள்ள நிலையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வெள்ளை அறிக்கை குறித்து தெரிவித்துள்ளதாவது. தேர்தல் நேர வாக்குறுதியை காப்பாற்ற வழியில்லை, வெள்ளை அறிக்கை மூலம் வேடிக்கை காட்ட முயற்சி என தெரிவித்தவர்.

மேலும் திமுக தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியாததற்கான காரணம் தேடும் வெற்று அறிக்கையாகவே இன்றைய வெள்ளை அறிக்கை உள்ளது. திமுகவின் பட்ஜெட்டுக்கு முன்பான வெள்ளை அறிக்கை வாண வேடிக்கையாக இருக்கும் என பெரிது எதிர்பார்க்கப்பட்டது; ஆனால் அது புஷ்வாணமாகவே முடிந்து போய்விட்டது.

வரி விதிப்பு இல்லாத ஜீரோ பட்ஜெட் இருக்க முடியாது என்று சொல்வதன் மூலம், 13-ஆம் தேதி பட்ஜெட்டில் பெரிய அளவிற்கு வரி விதிப்புக்கள் உண்டு என்பதை சொல்லாமல் சொல்வதாகவே உள்ளது. திமுக, தங்களின் கையாலாகாத தனத்திற்கு அதிமுக-பாஜக அரசுகளை குறைசொல்லி தப்பிக்கும் முயற்சியாகவே இந்த வெள்ளை அறிக்கை உள்ளது. என கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.