அரசைக் கேள்வியே கேட்கக் கூடாது என்பது தான் திமுக அரசு கைது மிரட்டல்கள். ஆனால் உச்ச நீதிமன்றமும், பிரதமர் அலுவலகமும் , குடியரசுத் தலைவர் அலுவலகமும் இந்த அரசு கேள்வி கேட்கும் நிலைக்குத் தள்ளுவோம் என மரித்தாஸ் தெரிவித்துள்ளார், மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, திமுக வேறு வழியே இல்லாமல் தன் அடக்குமுறை அரசியலைக் கையில் எடுத்துள்ளது. யாரும் தன்னை கேள்வி கேட்க கூடாது என்ற மனநிலைக்கு வந்துள்ளது.
ஏன் என்றால் அனைத்து வகையிலும் நிர்வாக தோல்வி, இன்று கொரோனாவிற்கு பிந்தைய பாதிப்புகளைக் கூட சிந்திக்காமல் மதுக்கடைகளைத் திறக்கும் நிலைக்குச் சென்றுவிட்டது. அரசு மருத்துவமனைகளில் சேரும் கொரொனா நோயாளிகளில் சக்கரை நோய் உள்ளவர்களுக்கு உரிய மருந்தை வெளியில் வாங்கி தரச் சொல்லிவிட்டு, அதை அரசு கணக்கில் எழுகிறார்கள் என்பது வரை மோசமான நிர்வாகம் மாநிலம் முழுவதும் மக்கள் கடும் கோபத்தில் வெறுப்பில் உள்ளனர்.
தற்போது அதைத் திசை திருப்ப மீடியா மாபியா கும்பலை வைத்து வித விதமான வேடிக்கை காட்டுகிறது, மக்களைத் திசை திருப்ப முயற்சிக்கிறது திமுக. அதற்கு மீடியா பெரும்பாலும் சலாம் போடுகிறார்கள். இந்த நிலையில் அடக்குமுறைக்கு எதிராக, சட்டத்தை தன் வசதிக்கு வளைக்கும் திமுக தலைமை குடும்பத்திற்கு எதிராகப் பிரதமர் அலுவலகம் ஆரம்பித்து, குடியரசுத் தலைவர் தொட்டு உச்ச நீதிமன்றம் வரை கொண்டு சேர்க்க வேலை செய்வோம்.
ஒவ்வொரு நபருடைய முயற்சியும் நிச்சயம் சரியான பலன் தரும். அரசைக் கேள்வியே கேட்கக் கூடாது என்பது தான் திமுக அரசு கைது மிரட்டல்கள். ஆனால் உச்ச நீதிமன்றமும், பிரதமர் அலுவலகமும் , குடியரசுத் தலைவர் அலுவலகமும் இந்த அரசு கேள்வி கேட்கும் நிலைக்குத் தள்ளுவோம் என தெரிவித்துள்ள மரித்தாஸ் இது தொடர்பான விவரம் இன்று வெளியிடுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.