கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் இருந்து வெளியேற்ற பல்வேறு முயற்சிகளை திமுக மேற்கொண்டு வருவதாக கூறபடுகிறது,இன்னும் எத்தனை நாட்களுக்கு காங்கிரஸ் கட்சியை தலையில் தூக்கி வைத்து சுமக்க போகிறோம் என கே.என்.நேரு பேசியது, காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருந்து வெளியேறினால் போகட்டும் என்று துரைமுருகன் பேசியது, இவ்வாறு தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தன் மானத்தை பரிசோதனை செய்வது போன்று நடந்து கொண்டனர் திமுக தலைவர்கள்.
ஆனால் காங்கிரஸ் கட்சி அனைத்தையும் சகித்து கொண்டு கூட்டணியில் தொடர்ந்து வந்தது, கடந்த சில மாதங்களில் ராகுல்காந்தி பலமுறை தமிழகம் வந்தார், ஆனால் ஒரு முறை குட கூட்டணி கட்சியான திமுக சார்பில் எந்த தலைவர்களும் மரியாதை நிமித்தமாக வரவேற்கவில்லை, இது ஒரு தேசிய கட்சியின் முக்கிய தலைவர்க்கு ஏற்பட்ட பெருத்த அவமானமாக கூறப்பட்டது, இந்நிலையில் தேர்தல் குறித்து கூட்டணி பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர்கள் ஆரம்பத்தில் ஈடுபட்டனர்.
ஆனால் திமுக நடந்து கொண்ட விதம் அவர்களை அவமரியாதை செய்வது போன்று இருந்ததை தொடர்ந்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தையை தமிழக காங்கிரஸ் தலைவர்கள் மட்டும் கலந்து கொண்டால் போதும் என முடிவு செய்யப்பட்டனர், இதன் பின்பு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்ற கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை முடிந்ததும், தனது கட்சி நிர்வாகிகளிடம் தேம்பி…தேம்பி கண்ணீர் விட்டு அழுத சம்பவம் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி தொடருமா என பரபரபரப்பு நிலவி வருகிறது.
அவர் தனது கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசுகையில், “நான் என்னுடைய அனைத்து இயல்பான குணங்களையும் விட்டுவிட்டுத்தான் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டேன். ஆனால், நமக்கு அங்கே மரியாதை இல்லை. அவர்கள் சொல்லும் எண்ணிக்கையை நாம் ஏற்றுக் கொண்டால் காங்கிரஸ் கட்சி நாளைக்கு இல்லாமல் போய்விடும். அதற்கு நான் விடமாட்டேன் நம் தலைவர்களையும் என்னையும் அவர்கள் அசிங்கப்படுத்தி விட்டார்கள். என்று தேம்பி அழுதுள்ளார் கே.எஸ்.அழகிரி. இதையடுத்து, அவரை பிற தலைவர்கள் சமாதானப்படுத்தியுள்ளனர்.
அதேசமயம், அழகிரி அழுததை பொறுத்துக்கொள்ள முடியாத நிர்வாகிகள், மானம் கெட்டு கூட்டணி வேண்டாம். நீங்களே முடிவெடுங்கள் என ஆக்ரோஷமாக கூறியுள்ளனர், இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் மற்றும் திமுக என இரு தரப்பிலும் நாம் விசாரித்ததில் சில தகவல்கள் கிடைத்துள்ளது, அதில் பேச்சுவார்த்தைக்கு சென்ற கே.எஸ் அழகிரியிடம், உங்கள் கட்சியின் தேசிய தலைவர்கள் வரவில்லையா என திமுக தரப்பில் இருந்து டி.ஆர்.பாலு கேட்டதாக கூறப்படுகிறது.
அதற்கு கே.எஸ் அழகிரி, இனி அவர்கள் வரமாட்டார்கள், கடந்த சட்டமன்ற தேர்தலின் ஒதுக்கியது போன்று 41 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் அல்லது கூட்டணியை விட்டு வெளிறுவதாக அவர்கள் தகவல் சொன்ன சொன்னார்கள் என கே.எஸ்.அழகிரி தெரிவிக்க, சற்றும் எதிர்பாராத விதமாக உங்கள் கட்சியில் 41 தொகுதியில் போட்டியிட வேட்பாளர்கள் இருக்கிறார்களா என அங்கே இருந்த திமுக பொது செயலாளர் துரைமுருகன் கேட்டதாக கூறபடுகிறது.
மேலும் இன்னைக்கு தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு 9 எம்பி இருக்கு என்றால் அதற்கு காரணம் நாங்க தான் என்ற நன்றி இல்லாமல் பேச வேண்டாம், கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போதே உங்களுக்கு 5 தொகுதிகளுக்கு மேல் ஒதுங்கியிருக்க கூடாது, முதலில் உங்க கட்சியில் மாவட்டடத்துக்கு ஒரு 50 நபர் இருப்பார்களா. என கே.எஸ்.அழகிரியை அடுத்து பேச முடியாத அளவுக்கு தொடர்ந்து அவமானப்படுத்தும் விதத்தில் துரைமுருகன் பேசியதாக கூறப்படுகிறது.
இந்த அவமானம் தாங்க முடியாமல் அறிவாலயத்தில் இருந்து வெளியே வெளியேறிய கே.எஸ்.அழகிரி, அடுத்து நடந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசுகையில் தனக்கு நடத்த அவமானத்தை நினைத்து தேம்பி ..தேம்பி அழுததாக கூறப்படுகிறது, இந்நிலையில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியே சென்று விட்டால், அது திமுகவுக்கு பாதகமாக முடிந்து விடும் என்பதால் அவர்களை சரிகட்டும் முயற்சியில் திமுகவினர் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.மேலும் இது போன்ற செய்திகளை உங்கள் வாட்ஸாப் செயலில் பெற 8925154074 என்ற எண்ணிற்கு “ACT NEWS” என்று மெசேஜ் செய்யவும் .