நடிகர் தவசிக்கு உதவிய எம்எல்ஏ வுக்கு முட்டுக்கடையாக இருக்கும் திமுக மாவட்ட செயலாளர்கள்.!திமுக தலைமை நடவடிக்கை எடுக்குமா.?

0
Follow on Google News

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் Dr.சரவணன், இவர் திருப்பரங்குன்றம் இடைதேர்தலில் போட்டியிட்டு சுமார் இரண்டாயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார், ஏற்கனவே மதுரை செல்லூர் பகுதியில் மருத்துவமனை நடத்தி வரும் Dr.சரவணன் திருப்பரங்குன்றம் தொகுதி வளர்ச்சிக்காக பல்வேறு பணிகளை செய்ய முற்பட்ட போது, மதுரை திமுக தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் மற்றும் மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் கோ.தளபதி ஆகியோர் முட்டுக்கட்டையாக இருந்து வருவதாக கூறப்படுகிறது.

மாவட்ட செயலாளராக இருக்கும் மணிமாறன், மற்றும் கோ.தளபதி ஆகியோர் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட முயற்சி செய்து வந்த நிலையில் Dr.சரவணனுக்கு கட்சியில் சீட் வழங்கியது மாவட்ட செயலாளர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது, மேலும் காட்சியிலும், தொகுதி மக்களிடமும் Dr.சரவணன் நற்பெயரை பெற்று வளர்ச்சி அடைந்து விட கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் திமுக மாவட்ட செயலாளர்கள் திருப்பரங்குன்றம் தொகுதியில் மாவட்ட செயலாளர் அனுமதி இன்றி எந்த ஒரு செயலும் செய்ய கூடாது என முட்டுக்கட்டை போடுவதாக கூறப்படுகிறது,

இந்நிலையில் மாவட்ட செயலாளர்கள் அரசியல் விளையாட்டை எதிர்கொள்ள முடியாத Dr.சரவணன், ஒரு கட்டத்தில் தொகுதிப்பக்கம் வருவதை கூட தவிர்த்து விட்டதாக கூறப்படுகிறது.ஆனால் திமுக மாவட்ட செயலாளர்களின் அதிகாரத்தினால் திருப்பரங்குன்றம் தொகுதியின் வளர்ச்சி பணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டு அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் Dr.சரவணன் அவர்களுக்கு தொகுதி மக்கள் மத்தியில் அவ பெயரை ஏற்படுத்தி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் 11.11.2020 அன்று புற்றுநோய் மிகவும் முற்றிய நிலையில் சரவணா மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட கருப்பன் குசும்புக்காரன் வசனம் புகழ் நடிகர் தவசி அவரின் மருத்துவ செலவுகள் அனைத்தையும் Dr.சரவணன் அவர்களுக்கு சொந்தமான சூர்யா தொண்டு நிறுவனத்தின் மூலம் ஏற்றுக்கொண்டு, நடிகர் தவசி Dr.சரவணன் அவர்களுக்கு சொந்தமான சரவணா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள அவருக்கு உணவுக்குழாயில் (Oesophageal stent) பொறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.