பொங்கல் பண்டிகை அன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் பார்வையிட, டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் மதுரை அவனியாபுரம் வந்த ராகுல் காந்தி , அவர் உணவு சாப்பிடும் போதும், அருகில் திமுக மாவட்ட கவுன்சிலர் மகளை அமர வைத்து சாப்பிட வைத்துள்ளனர், பின் அந்த பெண் ஒரு சாமானிய பெண் போன்று ராகுல் காந்தி பற்றி ஓவர் பில்டப் செய்து புகழாரம் சூட்டி தனியார் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் பேசியது அம்பலமாகி உள்ளது.
மதுரை வந்த காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தி மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் பார்வையிட்டு பின் அங்கிருந்து புறப்பட்டு மதுரையில் உள்ள தென்பழஞ்சி கிராமத்துக்கு சென்று அங்கே நடைபெற்ற பொங்கல் பண்டிகையில் கலந்து கொண்டார், இந்த நிகழ்வின் போது வயதான பாட்டியிடம் செல்பி எடுப்பது, மக்களோடு மக்களாக உணவு சாப்பிடுவது, போன்ற பல புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் தொடர்ந்து வெளியாகி ராகுல்காந்திக்கு ஓவர் பில்டப் கொடுக்க பட்டது.
இந்நிலையில் ராகுல் காந்தி தென்பழஞ்சி கிராமத்துக்கு வந்து சென்றதும், அவர் அருகில் அமர்ந்து உணவு சாப்பிட பெண் ஒருவரின் தொலைக்காட்சி பேட்டி சமூக வலைத்தளத்தில் முக்கிய இடம் பெற்றுள்ளது, அந்த பேட்டியில் பேசிய அந்த பெண், ராகுல் காந்தி அவர்கள் இங்கே பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் இடத்திற்கு வந்தார்கள், பின்பு இங்கு கொண்டாடப்படும் பண்டிகையில் அவர்களும் கலந்து கொண்டார், பின்பு சாப்பிடும் போது என் அருகில் அமர்ந்தார், நான் கூட பெரிய தலைவர் நம்முடன் பேச மாட்டார் என்று நினைத்தேன், ஆனால் மிக சாதாரணமாக என்னிடம் பேசினார்.
தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி அவர்கள் அம்மா, அப்பா என்ன செய்கிறார்கள் உங்கள் சகோதரர், சகோதரிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள், என தன்னிடம் கேட்டதாக அந்தப் பெண் தெரிவித்தார், ராகுல் காந்தி அவர்களுடன் நான் பேசும்போது எனக்கு பயம் கிடையாது, ஆனால் ரொம்ப டென்ஷனாக இருந்தது, அதற்கு ராகுல் காந்தி டென்ஷன் ஆக வேண்டாம், பதட்டம் இல்லாமல் சாதாரணமாக ஜாலியா பேசுங்க என்று சொன்னார்,நல்லா படிக்க வேண்டும் என்று கூறினார்.
ஒரு மிகப்பெரிய தலைவர் உடன் ஜாலியாக சந்தோஷமாக பேசியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என அந்த பெண் பேசியிருந்தார், இது காங்கிரஸ், மற்றும் திமுகவினரால் அதிகம் பகிரப்பட்டு, இது தான் எளிமையான தலைவருக்கு எடுத்துக்காட்டு என பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது,இது குறித்து தென்பழஞ்சி கிராம மக்களை தொடர்பு கொண்டு கேட்ட போது, ராகுல் காந்தி உடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட பெண் 21வது வார்டு திமுக மாவட்ட கவுன்சிலர் புவனேஸ்வரி ராஜசேகர் அவர்களின் மகள் என்றும், இவருடைய சித்தப்பா சுரேஷ் திருப்பரங்குன்றம் இளைஞரணி ஒன்றிய செயலாளர் என்றும் கூறப்படுகிறது.
ராகுல் காந்தி தென்பழஞ்சி கிராமத்துக்கு வருவதற்கு முன்பே அணைத்து ஏற்பாடுகளும் செட்டப் செய்யப்பட்டது என்று கூறப்படுகிறது, மேலும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் ராகுல் காந்தி வருவதற்கு முந்தைய நாள் தென்பழஞ்சி கிராமத்துக்கு வந்து ராகுல் காந்தி இங்கே வந்ததும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என பயிற்சி அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது, இந்நிலையில் திமுக மாவட்ட கவுன்சிலர் மகளை ராகுல்காந்தி பற்றி பில்டப் செய்து பேச வைத்து, இதை ஒரு சாமானிய பெண் பேசியது போன்று காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் பில்டப் கொடுத்து வருவது, அடேங்கப்பா.. இது உலக மகா நடிப்புடா சாமி என்று பார்ப்பவர்கள் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.மேலும் இது போன்ற செய்திகளை உங்கள் வாட்ஸாப் செயலில் பெற 8925154074 என்ற எண்ணிற்கு “ACT NEWS” என்று மெசேஜ் செய்யவும் .