திமுக வின் தற்போதைய நிலைமை குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் H.ராஜா, நான் தொடர்ந்து வலியுறுத்தி வருவது 2019 தேர்தல் ஒரு விதிவிலக்கு தேர்தல். அத்தேர்தலில் 38/39 தொகுதிகளில் ஒவ்வொரு தொகுதியிலும் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணி வென்றது. ஆனால் சில நாட்களுக்குப் பின்ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெற்ற வேலூர் இடைத்தேர்தலில் திமுக வெறும் 8000 வாக்குகள் வித்தியாசத்தில் திணறித்தான் வெற்றி பெற்றது.
அதற்குப் பிறகு 2 மாத இடைவெளியில் நடைபெற்ற விக்கிரவாண்டி மற்றும் நான்குநேரி இடைத் தேர்தல்களில் திமுக மற்றும் காங்கிரஸ் தங்களிடம் இருந்த தொகுதிகளை இழந்தனர்.அதன் பின்னர் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலிலும் 40% த்திற்கும் குறைவான இடங்களிலேயே திமுக கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால் கடந்த 20 ஆண்டுகளில் திமுக 3 இலக்க இடங்களில் வென்றதே இல்லை. திமுக இதுகாறும் நம்பி இருக்கும் முஸ்லீம்கள் ஓட்டு ஒவைசி வருகையால் பெரிய அளவில் பாதிக்கும்.
இந்து பண்டிகைகளுக்கு பல பத்தாண்டுகளாக வாழ்த்து கூறாத இந்து விரோத திமுக கந்தசஷ்டி கவசத்தை இழிவு செய்தவர்களுக்கு சட்ட உதவி செய்து கொண்டிருக்கும் திமுக வை இந்துக்கள் அடையாளம் கண்டு கொண்டுள்ளனர். தேவர் குருபூஜையில் தந்த விபூதி பிரசாதத்தை கீழே போட்டு தேவர் பெருமானை இழிவு படுத்தியதை தென் மாவட்ட மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.எனவே வருகின்ற தேர்தலில் திமுக தேறாது. நாம் நம் கொள்கை மற்றும் மோடிஜி அரசின் சாதனைகளை ஏந்தி முன்னேறுவோம். நம் கூட்டணி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும். திமுக கூட்டணி அல்ல என தெரிவித்த H.ராஜா.
மேலும் ரஜினிகாந்த அரசியல் வருகை குறித்து கூறுகையில், நண்பர் ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் கட்சி துவங்குவதாக அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.நல்லவர்கள் அரசியலுக்கு வரவேண்டும். அப்போதுதான் அரசியல் களம் தூய்மைப்படும்.தமிழகத்தில் அரசியலில் நேர்மை பொதுவாழ்வில் தூய்மையினை கொண்டுவர இவரது அரசியல் பிரவேசம் உறுதுணையாக அமையும்.என் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.,