திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை பகுதி திமுக நிர்வாகி கணேசன் என்பவர் திமுக ஆட்சி அமைப்பதற்கு சில நாட்களுக்கு முன் தனது முகநூல் பக்கத்தில் இன்னும் சில நாட்களில் திமுக ஆட்சி அமைந்ததும், பாஜகவினர் மீது கைது நடவடிக்கை எடுக்கபடும், உங்களுக்கான நாட்கள் எண்ணப்பட்டு வருவதாக திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பே மிரட்டும் போக்கில் பதிவு செய்துள்ளார், இது போன்ற பதிவுக்கு பாஜக திண்டுக்கல் மாவட்ட வடமதுரை நகர ஐடி பிரிவு தலைவர் சரவணன் சமூக வலைத்தள வழியாக பதில் விமர்சனம் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்த பின்பு தொடர்ந்து திமுகவினர் மற்றும் பாஜக நிர்வாகி சரவணன் இடையே சமூக வலைதளத்தில் கருத்து மோதல் மற்றும் அரசியல் விமர்சனங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது, இதனை தொடர்ந்து திமுகவினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இன்று அதிகாலை பாஜக நிர்வாகி சரவணனை போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று அவர் மீது வழக்கு பதிவு செய்து அமர வைத்துள்ளார்.
இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட பாஜக தலைவர் கனகராஜ் மற்றும் பாஜக நிர்வாகிகள் காவல் நிலையம் சென்று விமர்சனம் செய்த்தவரை கைது செய்யாமல் எதிர் விமர்சனம் செய்த்தவரை மட்டும் கைது செய்வது என்ன நியாயம் என்றும், காவல் துறை ஒருதலை பட்சமாக செயல்படுவதாக தங்கள் வாதங்களை முன் வைத்தனர், மேலும் திமுக நிர்வாகிகள் சமூக வலைதளத்தில் விமர்சனம் செய்ததையும் சுட்டி காட்டினார்.
இதனை தொடர்ந்து நீண்ட நேரமாகியும் கைது செய்த பாஜக நிர்வாகியை விடுவிக்க காவல்துறை தாமதம் செய்து வந்ததை தொடர்ந்து, சாலை மறியலில் ஈடுபட பாஜகவினர் முயற்சித்த போது அவர்களை போலிசார் கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்றினர், அதில் திண்டுக்கல் மாவட்ட பாஜக தலைவர் கனகராஜ், பாஜக ஐடி பிரிவு இணை பொறுப்பாளர் அனந்த கிருஷ்ணன் உட்பட பாஜக நிர்வாகிகள் பலர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்துக்கு பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார், அதில், விமர்சனங்களின் குரல் வளையை நெறிக்கும் திமுக, ஆட்சியில் இருப்பவர்கள் பெருந்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் சகிப்பு தன்மை இருக்க வேண்டும். பாஜக அரசின் மீது கடும் விமர்சனங்கள் வந்த போது கூட சகிப்பு தண்மையுடன் நடந்து கொண்டது, ஆனால் புதியதாக ஆட்சிக்கு வந்த திமுக விமசனங்களை பொறுத்து கொள்ள முடியாமல் கைது நடவடிக்கை வரை போவது என்பது கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என பேராசிரியர் தனது கண்டனத்தைபதிவு செய்துள்ளார்.