பத்து வருடங்களுக்கு மேல் அரசியல் களத்தில் நடிகை குஷ்பு இருந்து வருகிறார், ஆனால் அவருக்கு முதல் முதலில் தேர்தலில் போட்டியிட பாஜக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணி தேர்தல் பங்கீடுக்கு முன் வரை சேப்பாக்கம் தொகுதியில் தேர்தல் பணியை செய்து வந்த நடிகை குஷ்பு தற்போது தனக்கு கொடுக்கப்பட்ட ஆயிரம் விளக்கு தொகுதியில் சிக்ஸர் அடித்து தன்னை எதிர்த்து நிற்கும் திமுக வேட்பாளரை திணறடித்து வருகிறார்.
கடந்த 2016 சட்டசபை தேர்தலில், திமுக வேட்பாளர் 43.35 சதவிகிதம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்,அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பளர் 37.25 சதவிகிதம், பாஜக 5.98 சதவிகிதம், மக்கள் நல கூட்டணி 5.48 சதவிகிதம், பாமக 2.79 சதவிகிதம் வாக்குகளை பெற்றது, தற்போது மக்கள் நல கூட்டணி திமுக உடன் இணைந்து போட்டியிட்டாலும், அதிமுக உடன் பாஜக மற்றும் பாமக கூட்டணி அமைத்துள்ளது ஆயிரம் விளக்கு தொகுதியில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜக வேட்பாளருக்கு கடந்த 2016 தேர்தலை விட கூடுதல் பலமாக அமைத்துள்ளது.
மேலும் அதிமுக ஆயிரம் விளக்கு தொகுதியில் உள்ள சிட்டிங் எம்.எல்.ஏ கு.க.செல்வம் பாஜகவில் இணைந்து தற்போது பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார், கட்சியில் சீனியர்களுக்கு முக்கியத்துவம் இல்லை என குற்றசாட்டுகளை முன்வைத்து அவர் திமுகவில் இருந்து வெளியேறினார், அதே போன்று ஆயிரம் விளக்கு தொகுதியில் எத்தனையோ கட்சி மூத்த தலைவர்கள் இருக்கையில், ஆயிரம் விளக்கு தொகுதியில் நன்கு அறிமுகம் இல்லாத டாக்டர் எழிலன் என்பவருக்கு திமுக தலைமை வாய்ப்பு வழங்கியது கட்சி மூத்த நிர்வாகிகளை அதிருப்தி அடைய செய்துள்ளது.
குஷ்பு வேட்பாளராக அறிவிப்பு வரும் வரை திமுக கடும் இழுபறிக்கு பின்பு சொற்ப வாக்கு வித்தியாசத்தில் மீண்டும் ஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றி பெற்றுவிடும் என கூறப்பட்ட நிலையில், பாஜக சார்பில் குஷ்பு வேட்பாளராக அறிவிப்பு வெளியான பின்பு, குஷ்புவின் தீவிர பிரச்சாரம் மற்றும் திமுக சார்பில் அந்த தொகுதியில் களம் இறக்கப்பட்டுள்ள நன்கு அறிமுகம் இல்லாத வேட்பளர், ஆயிரம் விளக்கு தொகுயில் களம் நிலவரத்தை திருப்பி போட்டுள்ளது.
மேலும் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பளார் கே.எம்.சரீப் திமுகவின் வாக்குகளை பெருமளவில் பிரிப்பர் என களம் நிலவரம் தெரிவிக்கின்றனர், இது பாஜக வேட்பாளர் குஷ்புவுக்கு சாதகமாக அமைந்துள்ளது. தற்போது உள்ள அதே வேகத்துடன் கடைசி வரை சோர்ந்துவிடாமல் குஷ்பு வாக்கு வேட்டையில் ஈடுபட்டால் அவர் வெற்றி பெறுவதற்கு பிரகாசமான வாய்ப்புகள் இருப்பதாக சர்வே ரிப்போர்ட் தெரிவிக்கின்றது.
குஷ்புவின் தேர்தல் பிரச்சாரம் அந்த தொகுதி பெண் வாக்காளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது, குஷ்பு வெற்றிக்கு கணவர் சுந்தர் சி, இன்று ஆயிரம் விளக்கு தொகுயில் மேற்கொண்ட பிரச்சாரம் மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. மேலும் கடந்த பத்து வருடங்களுக்கு மேல் தேர்தல் களத்தில் பணியாற்றிய அனுபவம் உள்ள குஷ்புவின் பிரச்சாரத்தை எதிர்கொள்ள முடியாமல் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து போய் நிற்கிறார் திமுக வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.