தேர்தல் ஆணையத்துக்கு அடங்காத திமுக வேட்பாளர் மூர்த்தி.!புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்க தேர்தல் அதிகாரி தயங்குவது ஏன்.?

0
Follow on Google News

மதுரை கிழக்கு தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் திமுக மாவட்ட செயலாளர் மூர்த்தி, தேர்தல் ஆணையம் விதிகளை மீறி செயல்பட்டு வருவதாக கடும் குற்றசாட்டு எழுந்துள்ளது, ஏற்கனவே திமுக தலைமைக்கு கட்டு படாதவாறு, அடாவடிக்கு பெயர் போனவர் என்கிற பெயர் அவருக்கு இருந்து வரும் நிலையில் தற்போது தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வருவது, தேர்தல் ஆணையத்துக்கு அடங்காமல் செயல்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.

மதுரை கிழக்கு தொகுதியில், திமுக வேட்பாளர் மூர்த்திக்கு ஆதரவாக பிரச்சார போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளது, நேற்று திமுகவினர் அந்த தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதியில் போஸ்டர் ஒட்டியுள்ளனர், இது தேர்தல் விதிமுறைக்கு எதிரானது என்பதால், அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணன் தரப்பில் இருந்து மதுரை கிழக்கு தொகுதி தேர்தல் மண்டல் அதிகாரியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கப்பட்டது, ஆனால் தேர்தல் ஆணையம் இதுவரை எந்த ஒரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதில் உச்சகட்டமாக அரசு பேருந்துகளில் திமுக வேட்பாளர் மூர்த்திக்கு ஆதரவாக பிரச்சார போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது பார்ப்பவர்களை தேர்தல் ஆணையத்துக்கு கட்டுப்படாதவரா மூர்த்தி என கேள்வி கேட்க வைத்துள்ளது. இந்நிலையில் ஆளும்கட்சி வேட்பாளர்கள் தேர்தல் விதிமுறைக்கு உட்பட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், எதிர்கட்சி வேட்பாளர் தேர்தல் விதிமுறையை மீறி செயல்பட்டு வருவதும், தேர்தல் ஆணையமும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்ப்பதில் ஒளிந்திருக்கும் மர்மம் என்ன என்பது புரியாத புதிராக அமைத்துள்ளது.

இந்நிலையில் தேர்தல் ஆணையம் மதுரை கிழக்கு தொகுதி முழுவதும் தேர்தல் விதிமுறைக்கு எதிராக திமுக வேட்பாளர் தரப்பில் இருந்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை அப்புறப்படுத்தி, தேர்தல் விதிமுறைக்கு எதிராக செய்யப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக வேட்பாளர் தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்துள்ளது, மேலும் புகார் கொடுத்து இதுவரை நடவடிக்கை எடுக்காத கிழக்கு தொகுதி மண்டல் தேர்தல் அதிகாரி மீது தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது குறிப்படத்தக்கது.