வரும் சட்டசபை தேர்தலில் திருமங்கலம் தொகுதியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கின்றது என தொகுதி முழுவதும் நடந்த கருத்து கணிப்பில் மீண்டும் அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெற்றி அடைவதில் துளியளவும் சந்தேகம் இல்லை என்பதை தெள்ள தெளிவாக நிரூபித்துள்ளது கருத்து கணிப்புகள். திருமங்கலம் தொகுதியில், மொத்தம் 2,76,802 வாக்காளர்கள் உள்ளன, அதில் ஆண்கள் 1,34,647 வாக்காளர்கள், பெண்கள் 1,42,146 வாக்காளர்கள் மற்ற இனத்தவர் 9 பேர் உள்ளனர்,
இதுவரை நடந்த தேர்தலில் பெரும்பாலும் அதிமுக அதிகம் வெற்றி பெற்ற தொகுதி திருமங்கலம், 2009 திமுக ஆட்சியில் நடைபெற்ற திருமங்கலம் தொகுதி இடைதேர்தலில் தான், முதல் முதலில் வாக்குக்கு பணம் கொடுக்கும் நடைமுறையை அமல்படுத்தப்பட்டது, இதை நடைமுறைக்கு கொன்டுவந்தவர் திமுக முன்னால் தென் மண்டல செயலாளர் முக அழகிரி,இதற்கு பின்பு இந்த பார்முலாவை தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் பயன்படுத்த தொடங்கினர், இதற்கு திருமங்கலம் பார்முலா என பெயரிடப்பட்டது.
கடந்த 2016 சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்று அமைச்சரான ஆர்.பி.உதயகுமார், தொடர்ந்து அந்த தொகுதிக்கு பல்வேறு நல திட்டங்களை செய்துள்ளார், மக்கள் எளிதாக சந்திக்க கூடிய இடத்தில் இருக்கும் ஆர்.பி.உதயகுமார், தனது தொகுதி மக்களோடு மக்களாக சகஜமாக பழக்ககூடியவராக இருந்து வருவது அந்த மக்களின் மதிப்புக்குரியவராக இருந்து வருகிறார், மேலும் இந்த தொகுதிகளில் அதிகம் கிராமங்கள் உள்ள பகுதி என்பதால் அவர்கள் வசதிக்காக அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து மீண்டும் திருமங்கலம் தொகுதியில் ஆர்.பி.உதயகுமர் போட்டியிடுகிறார் என்பதால், தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு கூட திமுக சார்பில் யாரும் போட்டியிட ஆர்வம் காட்டவில்லை, தற்போது போட்டியிடும் திமுக வேட்பாளர் மணிமாறன் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டி வந்தார், திருமங்கலம் தொகுதியை திமுக கூட்டணி கட்சிக்கு தள்ளிவிடபடும் என எதிர்ப்பார்க்க பட்டது, ஆனால் திருமங்கலம் தொகுதியை கூட்டணி கட்சிகள் யாரும் ஏற்று கொள்ளாததால் திமுக அந்த தொகுதியில் போட்டியிடுகிறது.
திமுக மாவட்ட செயலாளராக உள்ள மணிமாறன் திருமங்கலம் தொகுதியில் போட்டியிட ஆரம்பத்தில் தயக்கம் காட்டினாலும் திமுக தலைமை வெற்றி பெற்றால் உங்களுக்கு அமைச்சர் பதிவு என ஆசை வார்த்தைகளை கூறி களம் இறக்கியுள்ளது திமுக தலைமை என கூறபடுகிறது, ஆனால் அமைச்சருக்கு எதிரான திமுகவின் பிரச்சாரம் அந்த தொகுதி மக்களிடம் எடுபடவில்லை, இது மேலும் திமுக மீது அந்த தொகுதி மக்களுக்கு கோவத்தை தான் ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து திருமங்கலம் தொகுதியில் திமுக வேட்பாளர் ஆர்.பி.உதய்குமாருக்கு எதிரான பிரச்சாரத்தை குறைத்து கொண்டு, அதிமுக தலைமை மற்றும் பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் திமுகவினர், இந்நிலையில் திருமங்கலம் தொகுதியில் கடந்த தேர்தலில் 23 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செல்வாக்கு கடந்த 5 வருடங்களில் அவரின் செயல்பாடுகளால் மேலும் உயர்ந்துள்ளதால் இம்முறை 30 முதல் 35 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றனர்.
இதே போன்று அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பளார் இந்த தொகுதியில் 8 முதல் 10 ஆயிரம் வாக்குகள் வரை பெறுவார் என்றும், இது கடந்த 2016 தேர்தலில் மக்கள் நல கூட்டணி சார்பில் தேமுதிக வாங்கிய வாக்குகளை விட குறைவு என்பதால் அதிமுக வேட்பாளருக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படுத்தாது என கள நிலவரம் கூறுகிறது, இந்நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டி வந்த திமுக மாவட்ட செயலாளர் மணிமாறனை திருமங்கலம் தொகுதியில் களம் இறங்கி திமுக தலைமை ஏமாற்றிவிட்டதாக மணிமாறன் தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பி வருவதாக கூறப்படுகிறது.