அரசு நிலத்தை ஆட்டையா போடும் திமுக கிளைச் செயலாளர்.! கேள்வி கேட்ட மக்களுக்கு மிரட்டல்…

0
Follow on Google News

வேலூர் மாவட்டம், மேல்மணவூரில் அரசுக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலம் காலியாக இருக்கிறது, இந்த இடத்தில ஒரு சில அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வரும் நிலையில் மீதமுள்ள இடத்தில் ஐடிஇ கட்ட அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பிரதான சாலையில் இருக்கும் இந்த நிலத்தில் கிராம மக்கள் ஒன்றிணைந்து கடந்த ஆண்டு சிறிய பிள்ளையார் கோவில் ஒன்றைக் காட்டியுள்ளனர்.

இந்த கோவிலை தனது சொந்த பணத்தில் செலவு செய்து பராமரித்து கொள்வதாக அந்த கிராம மக்களிடம் கூறி உள்ளே நுழைந்துள்ளார் திமுக கிளைச் செயலாளர் சிவா. காலப்போக்கில் அங்கேயே தங்கி விட்டார், இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வரட்டும் என காத்திருந்த சிவா, தற்போது அவர் நினைத்தது போன்று திமுக ஆட்சி அமைத்த பின் அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிக்க தொடங்கி விட்டதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

முதலில் கோவில் அருகே தங்கி இருந்த திமுக பிரமுகர் சிவா தற்போது கோவில் பக்கத்தில் பெரிய அளவிலான கட்டடம் ஒன்றை கட்டியுள்ளார், இதனை கண்டு அதிர்ந்து போன கிராம மக்கள் திமுக பிரமுகர் சிவாவிடம், அரசுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து எதற்காக கட்டடம் கட்டி வருகிறீர்கள் என கேட்டபோது அவர்களை மிரட்டி உள்ளார் . மேலும் வேலூர் மாவட்டம் திமுக கோட்டை என்றும் தன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது என்று கேள்வி கேட்ட மக்களை மிரட்டியுள்ளார்.

அரசுக்கு சொந்தமான அந்த இடத்தை ஆக்கிரமித்துக் கொள்ள வேண்டும் என்பது திமுக பிரமுகர் சிவாவின் நீண்ட நாள் திட்டம் என்று கிராம மக்களின் புகாராக இருக்கிறது. மேலும் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த திமுக முக்கிய புள்ளி ஒருவர் இதன் பின்னணியில் இருப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். சிவாவிடம் இருந்து நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என்ற கோரிக்கையுடன் மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்த நடவடிக்கைக்காக காத்து கிடப்பது குறிப்பிடத்தக்கது.