டேய் நீ தாண்டா சங்கி.. இல்லை நீ தான் சங்கி… இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் சங்கி ஸ்டாலின் , சங்கி சீமான் ..எதற்கு தெரியுமா.?

0
Follow on Google News

பாரம்பரிய மிக்க கட்சியான திமுக சமீப காலமாக நாம் தமிழர் கட்சியிடம் சண்டையிட்டு, இதில் நாம் தமிழர் கட்சியை எதிர் கொள்ள முடியாமல் திணறி வருகிறது. இதனிடையே சீமான் ஒரு சங்கி என்று திமுகவினர் கூற, பதிலுக்கு ஸ்டாலின் ஒரு சங்கி என நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் தெரிவிக்க, இதில் யார் சங்கி என்பதில் இரண்டு கட்சிக்கும் இடையில் நடக்கும் சண்டையில் அவ்வப்போது, நானும் இருக்கேன் என்று காட்டி கொள்ள காங்கிரஸ் எம்பி ஜோதிமணி சீமானை விமர்சனம் செய்து வருகிறார்.

இந்நிலையில் கிருஸ்துவமும், இஸ்லாமியமும் தமிழன் சமயமே இல்லை, ஓன்று ஐரோப்பிய மதம், மற்றொருன்று அரேபிய மதம், என்னுடைய சமையம் சைவம், என்னுடைய சைவம் மாலியம், என்னுடைய சமையம் சிவ சமயம் என சமீபத்தில் சீமான் மேடை ஒன்றில் பேசியது திமுகவினர் சீமான் ஒரு சங்கி என உறுதியாகி உள்ளது என திமுகவினர் கருத்து தெரிவிக்க.

திமுகவினரை உசுப்பேத்தும் வகையில் கரூர் எம்பி ஜோதிமணி,சீமான் ஒரு பாஜக அடிவருடி.பாஜக வெறுப்பு புரையோடிக்கிடக்கும், கல்வி,வேலைவாய்பு,தொழில்,சமூகநீதியை முன்னிறுத்தும் தமிழகத்தில்,தன்னால் நேரடியாக களமிறங்கி மத,கலவர அரசியலை செய்ய முடியவில்லை என்பதால் பாஜக சீமானை களமிறக்கியிருக்கிறது.எச்சரிக்கை தேவை. என பதிவு செய்துள்ளார், இதனை தொடர்ந்து நாம் தமிழர் கட்சி – திமுக இடையே உச்சகட்ட மோதல் ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து நாம் தமிழர் கட்சியினர் சங்கி ஸ்டாலின் என்றும் திமுகவினர் சங்கி சீமான் என்றும் ஹாஷ்டகை இந்தியா அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர், இதில் சங்கி ஸ்டாலின் 70 ஆயிரம் கடந்து முதல் இடத்திலும், சங்கி சீமான் 30 ஆயிரம் கடந்து பின் தங்கியும் உள்ளது. இதில் நாம் தமிழர் கட்சியினர் திமுகவை சமூக வலைதளத்தில் அடித்து துவம்சம் செய்து முன்னனி வகிக்கின்றது குறிப்பிடத்தக்கது.