தமிழக முதல்வர் முக ஸ்டாலினை விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த வன்னியரசு டிவீட்டர் பக்கத்தில் ஒருமையில் விமர்சனம் செய்தது போன்று ஒரு பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில் முக ஸ்டாலின் மாஸ்க் அணியாமல் சைக்கிள் ஓட்டுவது போன்ற புகைப்படத்தை பகிர்ந்து, மாஸ்க் எங்கடா மயிரே என வன்னியரசு பதிவு செய்தது போன்று ஒரு பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள வன்னியரசு தமிழ்நாட்டில் வெறுப்பரசியல் மற்றும் அவதூறு- பொய்யரசியலை செய்துவரும் சீமான், தமது பொறுக்கிக்கும்பலை வைத்து போலி கணக்கு மூலம் கேவலமான பரப்புரையை செய்து வருகிறார்.கடந்த 6.1.2022 அன்று on line மூலம் சென்னை ஆணையர் அலுவலகத்தில் புகார் செய்துள்ளேன்.எனது விமர்சனங்களை நேர்மையாக எதிர்கொள்ள முடியாத கோழையான சீமானின் இப்போக்கு கேவலமானது.கண்டனத்துக்குரியது.
சீமான் செருப்பை காட்டிய கேவலமான மனநிலை தான் இந்த பதிவும். தன்னுடைய கருத்தை இன்னொருவன் சொன்னதாக பதிவிடுவது, தனது பிள்ளைக்கு மற்றவனை தந்தையாக சொந்தம் கொண்டாடுவதை போல.
அப்படி தான் திரு சீமான் நான் சொல்லாதவற்றை சொன்னதாக, தமது பொறுக்கிக்கும்பலை வைத்து பதிவிட்டு வருகிறார். நேர்மையற்ற இந்த கோழையின் செயலை தோழர்கள் அம்பலப்படுத்துவோம் என்றும்,
மேலும், RSS பின்னால் நின்று இயங்கி வரும் திரு. சீமான் அவர்களின் அரசியலை அம்பலப்படுத்துவதால்,
அதை எதிர்கொள்ள முடியாமல் தமது பொறுக்கிக்கும்பலை வைத்து கோழைத்தனமாக இப்படி செய்கிறார்.
இதனால் என்னுடைய கருத்திலிருந்து ஒரு போதும் பின் வாங்கப்போவதில்லை. சீமான் ஒரு கோழை என கடுமையாக சாடியுள்ள வன்னியரசு, மேலும் வலதுசாரி இயக்க ஒருங்கிணைப்பாளரான திரு.சீமான் தமது அடிபொடிகள் மூலம் என் பெயரில் போலியான கணக்கை துவங்கி,
மிககேவலமாக அவதூறு பதிவிடுவதை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் Online புகார் கொடுத்துள்ளேன். காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன். என வன்னி அரசு தெரிவித்துள்ளார். இந்நிலையில் வன்னி அரசு பெயரில் போலி டிவீட்டர் கணக்கு தொடக்கப்பட்டு முதல்வர் குறித்து ஒருமையில் பதிவு செய்து வந்தது தெரியவந்துள்ளது.