இந்திய ராணுவ வீரர்களை மோடி கொலை செய்தாரா.?கைதாகிறார் ஆபாச பேச்சாளர் சுந்தரவள்ளி.! நீதிமன்றம் அதிரடி..!

0
Follow on Google News

கடந்த 11-11-2020 அன்று வழக்கறிஞர் அசோக் என்பவர் சென்னை கமிசனருக்கு மனு ஒன்றை அளித்தார், அதில் தேசத்துக்கு எதிராக பேசிய சுந்தரவல்லி என்பவரை காப்பாற்றுவதற்காக வேண்டுமென்றே அவர் செய்த குற்றத்திற்கு தான் ஏற்கனவே பதிவு செய்த வழக்குக்கு FIR போடாமல் அவர் மீது நியாயமான நடவடிக்கை எடுக்காமல் வேண்டுமென்றே காப்பாற்றுவது நியாயமா என்று கமிஷனரிடம் கேள்வி எழுப்பும் விதத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில்,சுந்தரவள்ளி என்பவர் இந்திய நாட்டிற்கு எதிராகவும் பாகிஸ்தான் நாட்டிற்கு சார்பாகவும் ஒரு வீடியோ வெளியிட்டார். மேலும் நாட்டில் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும், இந்தியாவில் வன்முறைகளை, கலவரத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக இந்திய நாட்டின் மீது வெறுப்பையும் இந்திய ராணுவத்தின் மீது வெறுப்பையும் மக்களிடையே உருவாக்கும் விதமாக செயல்பட்டு ஒரு விடியோவை
வெளியிட்டார்.

அந்த விடியோவில் உள்ளதாவது, “இந்திய ராணுவ வீரர்கள் கொத்துக்கொத்தாக கொலை செய்யப்படுகிறார்கள் என்றும், ராணுவ வீரர்களின் பிணத்தை வைத்து தன்னை சிறப்படுத்திக் கொள்கிறார் இந்திய பிரதமர் மோடி என்றும், மேலும் “சர்ஜிகல் strile” பண்ணினோம் என்று இந்தியாவின் ராணுவமும் பிரதமரும் சொன்னார்கள் ஆனால் ஒரே வாரத்தில் ராணுவ தளவாடங்கள் உள்ள பகுதியில் பதான் கோர்ட்டில் நாலு பயங்கரவாதிகள் உள்ளே பூந்து அடித்தார்கள் என்னய்யா பெரிய பெரிய சர்ஜிகல் strike பண்ணினேன்னு சொல்றீங்க இந்தியாவும் இந்திய ராணுவமும் ஆனால் நான்கு பேர் உள்ள பூந்து அடிச்சுட்டாங்க என்றும்,

ஏதாவது பிரச்சனை இந்திய பிரதமர் மோடிக்கு வருதுன்னா உடனே ராணுவ வீரர்களை கொல்லனும் என்றும். 2500 ராணுவ வீரர்களை ஆடு மாடுகளை போல் வண்டியிலே ஏற்றி வரிசையாக போனார்கள் என்றும், மேலும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அபிநந்தனை மானத்தோடு அனுப்பினார் என்று எதிரி நட்டு பிரதமரை புகழ்ந்து பேசி ஆனால் இந்திய பிரதமர் மோடி ராணுவவீரர்கள் 40 பேரை கொன்று விட்டார் என்று இந்திய நாட்டு பிரதமரை அவர்கள் முன்பு இகழ்ந்து இந்தியாவுக்கு எதிராக இந்திய இறையாண்மைக்கு எதிராக இந்திய ராணுவத்தை அசிங்க படுத்தி உலகம் முழுவதும் அந்த விடியோவை பரப்பினார்.

கொரானா பிரச்சனையில் இந்தியா எதிர்கொள்ள தயாராக இல்லை, என்றும் இந்தியா தோற்று போய் விட்டது என்றும் கூறியுள்ளார் இந்தியாவுக்கு ஏதிராக, இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசி உலகம் முழுவதும் பரப்பி நாட்டுக்கு துரோகம் விளைவித்தார். மேலும் “அபிநந்தனுக்கு கோட்டு சட்டை எல்லாம் வாங்கிக் கொடுத்து கௌரவமாக இந்தியாவுக்கு அனுப்பி வைத்த பாகிஸ்தான் பிரதமர் எங்களுக்கு அண்டை நாடுகளோடு சண்டை வேண்டாம் என்று இம்ரான்கான் பேசியதாகவும் இதனால் யாரை பேசியிருக்க வேண்டும் 40 பேரை பாதுகாக்க முடியாத மோடியையா அல்லது கோட்டு சட்டை வாங்கி கொடுத்த இம்ரான்கானையா என்று கூறியுள்ளார்”

மேற்கண்ட பேச்சு அரசியல் பேச்சு அல்ல, இந்திய தேசத்திற்கு துரோகம் விளைவிக்க வேண்டும் என்பதற்காகவும் நாட்டில் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும், ராணுவத்திற்கும் இந்திய அரசுக்கும் எதிராக கலவரத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். மேற்கண்ட குற்றம் ஒரு புலன் கொள்ளக்கூடிய குற்றமாகும் Cognizable offence ஆகும். இந்த சூழலில் நான் உடனடியாக 27 1,2020, 23.3.2020 அன்று புகார் கொடுத்து அந்தப் புகாரின் அடிப்படையில் சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதன் பிறகு சென்னை உயர்நீதிமன்றத்தில் HR போட சொல்லி வழக்கு தொடர்ந்தோம். மேற்கண்ட வழக்கில் தங்களுடைய வழக்கறிஞரே (Public Proxictilor) வழக்கு கோப்புகள் அனைத்தும் Cyter Crime Branch, T.Nagar -ல் மாற்றப்பட்டுள்ளது என்றும், விசாரணை நடைபெற்று வருகிறது என்றும், புகார்தாரரான என்னை விசாரணைக்கு ஒத்துழைக்க மாறு கேட்டுக்கொண்டார்கள்.

அதனடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு போட்டது. நானும் விசாரணைக்கு நீங்கள் கூப்பிடும்போதெல்லாம் தொடர்ந்து ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைத்து வந்தேன். ஆனால் இது புலன் கொள்ளக்கூடிய குற்றம் Cognizable offence என்று தெரிந்துகொண்டே சுந்தரவல்லி மீது HR போட்டு நடவடிக்கை எடுக்காமல் அவரை மறைமுகமாக காப்பாற்றி வருகிறீர்கள். இந்தியாவிற்கு துரோகம் செய்யும் சுந்தரவல்லி மீது நடவடிக்கை எடுக்காமல், சுந்தரவல்லியை காப்பாற்றி வருவது எந்த விதத்தில் நியாயம் Section 154 CRIC இன் படி, மற்றும் உச்ச நீதி மன்ற தீர்ப்பு லலிதா குமாரி Hurdlgrinidnt இன் படி புலன் கொள்ளகூடிய குற்றம் தொடர்பான புகார் வந்தாலே HR போட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டம் தெளிவாகக்
கூறியுள்ளது.

ஆனால் இதுவரை FIR போடாமல் சுந்தரவல்லியை மறைமுகமாக காப்பாற்றி வருகிறீர்கள். எனவே நியாயமான நேர்மையான விசாரணை நடத்த வேண்டும் என்று பணிவோடு தங்களை கேட்டுக்கொள்கிறேன். என வழக்கறிகர் அசோக் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதனை தொடர்ந்து சுந்தரவள்ளி மீது தொடுத்த வழக்கின் மீது தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது காவல்த்துறை, இது குறித்து வழக்கறிகர் அசோக் தெரிவித்ததாவது, 23/03/2020 அன்று தேசத்துக்கு எதிராக பேசிய சுந்தரி மீது வழக்கு பதிவு செய்ய புகார் மனு கொடுக்கப்பட்டது, இந்த மனுவின் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் 15562/2020 வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மனுவின் மீது நீதி அரசர் வழக்குப்பதிவு செய்ய உத்தரவு பிறப்பித்தார், 01/10/2020 காவல்துறை இந்த உத்தரவின் மீது எந்த நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அது சம்பந்தமாக மீண்டும் ஒரு மனுவை காவல்துறையிடம் வழங்கப்பட்டது,11/11/2020 பிறகு இரண்டாவது முறையாக நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நீதியரசர் 30/12 /2020 அன்று விசாரணையை முடித்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்திய நாட்டிற்கு எதிராகவும் பாகிஸ்தான் நாட்டிற்கு ஆதரவாகவும் பேசிய தேச துரோகி சுந்தரவல்லி மீது தமிழக காவல்துறை மறைமுகமாக காப்பாற்றி வருகிறது.

இதை எதிர்த்து சென்னை டிஜிபி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் அமைதியான முறையில் நடைபெறும் ஆதரவு தாருங்கள் நம் தாய் நாட்டை காப்பாற்ற, நீதிமன்ற உத்தரவை காவல்துறை மதிக்காத பட்சத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்யப்படும் என பாஜக அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் அசோக் தெரிவித்துள்ளார். இந்நிலையில் விரைவில் சுந்தரவள்ளி நீதிமன்றத்தின் உதவியுடன் தண்டிக்கப்படுவர் என எதிர்பார்க்க படுகிறது.