வ.உ.சி க்கு பணம் கொடுத்தது பக்கிரி ராவுத்தரா .? இவரை பற்றி வ.உ.சி சொன்ன வார்த்தை என்ன தெரியுமா.?

0
Follow on Google News

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கு பக்கிரி முகமது என்பவர் கப்பல் வாங்க பணம் கொடுத்ததாக சமூக வலைதளத்தில் ஒரு செய்தி வைரலாக பரவி வருகிறது, இந்த செய்தி உண்மை இல்லை என்றும், இந்த செய்தியில் குறிப்பிட்டுள்ள பக்கிரி முகமது பற்றியும், மற்றும் இந்த செய்தி ஒரு போலியானது என நிருபிக்கும் வகையில் திருநெல்வேலியை சேர்ந்த வழக்கறிஞர் குற்றாலநாதன் சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.

அதில், அவர் தெரிவித்துள்ளதாவது, “பார்த்தான் கணக்கை பயந்தான் பக்கிரி, ஆர்த்தான் இடித்தேன் அழுதான் படுத்தான்” என்னங்க இது புது பாட்டா இருக்கேன்னு பாக்குறீங்களா ? வ.உ.சி. கப்பல் விட ஒரு கோடி பணம் கொடுத்தார்னு ஒரு கும்பல் பொய்யுரை பரப்பி வருகிறதே! அதே பக்கிரி ராவுத்தரை பற்றி வ.உ.சிதம்பரனார் தானே எழுதிய தன் ” சுயசரிதை ” யில் கூறிய வார்த்தைதான் அது… இந்த பக்கிரியை தான் வ.உ.சி க்கு கப்பல் வாங்கி கொடுத்தார்னு கதை விடுறாங்க!

இந்த பொய் பரப்புரைக்கு பதிலடி கொடுக்க நெல்லையில் உள்ள வ.உ.சி மணிமண்டபத்திற்கு சென்று சில தகவல் சேகரித்த போதுதான் உண்மை தெரிந்தது. உண்மையில்… கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி ஐயா துவக்கிய சுதேசி கப்பல் கம்பெனி யின் மொத்த முதலீடு பத்து லட்சம்! 16.10.1906 ல் சுதேசி கப்பல் கம்பெனி துவக்கப்பட்டது. பத்து லட்சம் முதலீடு 40,000 பங்குகளாக (Shares) பிரிக்கப்பட்டது ஒரு பங்கு விலை 25 ரூபாய்..

அதிக பங்குகளை விலைக்கு வாங்கியவர் பழவநத்தம் ஜமீன்தாரரும் நான்காம் தமிழ் சங்கம் நிறுவியவருமான வள்ளல் பாண்டித்துரை அவர்கள்.. அதனால் தான் 15. இயக்குனர்களை கொண்ட சுதேசி கப்பல் கம்பெணி தலைவராக வள்ளல் பாண்டித்துரை இருந்தார்…இதை யாருமே எங்குமே குறிப்பிட்டதில்லை . வள்ளல் பாண்டித்துரை அவர்களே சொன்னதில்லை.. கப்பல் விடுவதற்காக சொத்தையே விற்று அலைந்து திரிந்து கப்பல் விடுவதற்காக கடுமையாக உழைத்த வ.உ.சிதம்பரனார் அதில் துணை செயலாளராக மட்டுமே பொறுப்பேற்றது இருவரின் பெருந்தன்மை..

சரி… அப்போது இந்த அயல்நாட்டு கைகூலி பக்கிரி முகமது என்பவன் யார்? இவர் கொழும்புக்கு சரக்குகளை கப்பலில் வணிகம் செய்யும் வியாபாரி! இவர் வணிக நோக்கில் தனது பொருள்களை வ.உ.சி யின் சுதேசி கப்பலில் அனுப்ப சில ஆயிரம் பணம் கொடுத்து சில பங்குகளை வாங்ங்கியுள்ளார்! பங்குகளை வாங்கிய சில நாட்களிலேயே ஆங்கிலேயனின் ராஜதந்திர நடவடிக்கையின் ஒரு பகுதியாக பங்கு பணத்தை திருப்பி தர கோரி வ.உ.சி க்கு இந்த பக்கிரி முகமது மூலம் கடுமையான நெருக்கடி கொடுத்துள்ளனர்.

மேலும் இந்த பக்கிரி முகமது வெள்ளைக்காரன் தூண்டுதலில் பெயரில் பணத்தை திரும்ப கேட்டு வ.உ.சிதம்பரனாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளான். இதை கண்ட நேர்மைக்கும், தேசபக்திக்கும் பெயர்போன வ.உ.சிதம்பரனார் நெஞ்சில் ஈட்டி போல் குத்தியது போல் இருந்திருக்கிறது. இப்படிப்பட்ட இந்த பக்கிரி முகமது என்பவர் சுதந்திர போராட்ட தியாகியாமாம்! வ.உ.சி அவர்களை ஒரு பிச்சைகாரனை போல் இழிவுபடுத்தி பக்கீர் பத்து லட்சம் கொடுத்தார்,இரண்டு லட்சம் கொடுத்தார், ஒரு லட்சம் கொடுத்தார் கப்பல் ஓட்ட சொல்லி கொடுத்தார்னு சிலர் கலர் கலரா ரீல் விடுறாங்க.. இதை விட ஒரு பெரிய அவமானம் வ.உ.சி க்கு இருந்திருக்க முடியாது என தெரிவித்துள்ளார் வழக்கறிஞர் குற்றாலநாதன்.