தேசிய தலைவர்கள் தென் இந்தியாவில் அரசியல் பிரச்சாரம் செய்ய வரும்போது அவர்களுக்கு மொழிபெயர்ப்பு செய்வது தவிர்க்க முடியாததாக அமைந்துள்ளது. வட இந்தியாவில் உள்ள மாநிலங்களில் உள்ள மக்களுக்கு இந்தி தெரியும் என்பதால் தேசிய தலைவர்கள் அங்கே இந்தியில் நேரடியாக பேசுகின்றனர், ஆனால் தென்னிந்தியாவில் கர்நாடகா மற்றும் ஆந்திர போன்ற மாநிலங்களில் தவிர்க்க முடியாத இடங்களில் மட்டும் மொழி பெயர்ப்பு செய்யபடும் மற்ற இடங்களில் நேரடியாக இந்தியில் பேசி வருகின்றனர்.
ஆனால் தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களில் மொழிபெயர்ப்பு அவசியமாக கருதப்படுகிறது, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பிரதமர் மோடி மற்றும் உள்த்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் பேச்சுக்கள் எந்த இரு மாநிலங்களில் உன்னிப்பாக கவனிக்கப்படுவதால் அவர்களின் மேடை பேச்சுக்கள் அந்தந்த மொழிக்கு ஏற்ப மொழிபெயர்ப்பு செய்யப்படும், அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் தேசிய தலைவர்களுக்கு மொழிபெயர்ப்பு செய்வதில் எந்த ஒரு சிக்கலும் ஏற்படாது, காரணம் அரசு சார்பில் அனுபவமிக்க ஒருவர் அங்கே மொழிபெயர்ப்பு செய்ய நியமிக்கப்படுவர்.
ஆனால் அரசியல் கட்சி நிகழ்ச்சியில் பெரும்பாலும் அதே அரசியல் கட்சியை சார்ந்த முக்கிய பிரமுகர் ஒருவர் தான் மொழியாக்கம் செய்ய வேண்டும் என்பதால் மொழிபெயர்ப்பாளர்களின் தடுமாற்றம் அங்கே பேசும் தேசிய தலைவரின் இமேஜை மக்கள் மத்தியில் சரிவை நோக்கி இழுத்து சென்றுவிடும். அந்த வகையில் காங்கிரஸ் முன்னால் தலைவர் ராகுல் காந்தி கேரளாவில் பிரச்சாரம் மேற்கொண்ட போது வயதான ஒருவர் மொழியாக்கம் செய்ததது சில நேரங்களில் ராகுல்காந்தியை கூட தர்ம சங்கடத்துக்கு ஆளாக்கியது.
இது இந்தியா முழுவதும் கேலி, கிண்டலுக்கு ஆளானது, அதே போன்று தமிழ்நாட்டில் ராகுல் காந்தி கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது முன்னால் காங்கிரஸ் தலைவர் தங்கபாலு அவர்கள் தமிழாக்கம் செய்தது, தமிழகத்தில் ராகுல் காந்தியின் இமேஜை பெருமளவு சரிவுக்கு இழுத்து சென்றது, இது போன்று ஒரு தலைவரின் உரையை மக்கள் மத்தியில் மொழி பெயர்ப்பது மூலம் அந்த தலைவரின் இமேஜ் அந்த மொழிபெயர்ப்பாளரின் திறமையில் தான் உள்ளது, என்பது கடந்த கால சம்பவங்கள் உதாரணம்.
இந்நிலையில் கடந்த 2ஆம் தேதி பிரதமர் மோடி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய மதுரை வந்தார், அப்போது அவர் பேசிய உரையை தமிழாக்கம் செய்தது பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் ஸ்ரீநிவாசன், பிரதமர் பேசி ஐந்து நாட்களுக்கு பிறகும் சமூக வளைத்தளத்தில் பிரதமரின் இந்த உரை வைரலாகி வருகிறது, ஆங்கிலத்தில் பேசிய பிரதமர் உரையை தமிழாக்கம் செய்த பேராசிரியர் பேசிய பேச்சுக்கள் வெகுவாக மக்களை கவர்ந்து வருகிறது.
தமிழாக்கம் செய்யும்போது, வார்த்தைக்கு ஏற்ற உச்சரிப்பு, ஒரு வாசிப்பு போன்று இல்லாமல், சில இடங்களில் ஆக்ரோஷமாகவும், சில இடங்களில் மென்மையாகவும் பேராசிரியரின் மொழி பெயர்ப்பு இருந்தது, மேலும் பிழையில்லாமல் அவர் மொழிபெயர்ப்பு செய்த வீடியோவை பார்த்தவர்கள், யாருய்யா..இவர்? இப்படி ஒரு நபரை தான் தேடிக்கொண்டு இருந்தோம், அருமையாக அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளும் விதத்தில் தமிழாக்கம் செய்கிறாரே, இவரின் மொழியாக்கம் பிரதமருக்கு கூடுதல் பெருமை சேர்த்துவிட்டது, என பாராட்டி வருவது குறிப்பிடதக்கது.