புதிய தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீடிப்பு. தமிழக முதல்வர் அறிவிப்பு…

0
Follow on Google News

தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் தளர்வுகளுடன் ஊரடங்கு நீடிப்பு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு. தமிழகத்தில் ஏற்கனவே தளர் வற்ற ஊரடங்கு ஜீன்‌ 7 வரை அமலில் உள்ள நிலையில், தற்போது கொரோனா தொற்று ஓரளவு குறைந்து வரும் நிலையில் தளர்வுகளுடன் முழு ஊரடங்கை மேலும் ஜீன் 7 முதல் ஜீன் 14 வரை ஒரு வாரத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். கொரோனா தொற்று அதிகம் பரவக்கூடிய கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், சேலம் கரூர் தஞ்சாவூர் நாமக்கல், திருவாரூர் நாகை, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களுக்கு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

11 மாவட்டத்திற்கான தளர்வுகள் என்னென்ன:
மளிகை கடைகள், காய்கறி கடைகள், மீன் மற்றும் இறைச்சி கடைகளுக்கு காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. பழம், பூ, காய்கறி ஆகிய நடைபாதை கடைகளுக்கு காலை 6 மணி முதல் மாலை 5 அனுமதிக்கப்பட்டுள்ளது. மீன் மற்றும் இறைச்சிக்கடைகள் மொத்த விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. 30 சதவீத பணியாளர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கவும், சார்பதிவாளர் அலுவலகங்கள் 50 கண்களுடன் பத்திரப்பதிவு செய்து கொள்ளவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50% பணியாளர்களுடன் வழிகாட்டு முறைகளை கடைபிடித்து செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

11 மாவட்டங்களை தவிர தொற்று குறைந்த 27 மாவட்டங்களுக்கு என்ன என்ன சிறப்பு தளர்வுகள்:
மளிகை கடைகள், காய்கறி கடைகள், மீன் மற்றும் இறைச்சி கடைகளுக்கு காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. பழம், பூ, காய்கறி ஆகிய நடைபாதை கடைகளுக்கு காலை 6 மணி முதல் மாலை 5 அனுமதிக்கப்பட்டுள்ளது. மீன் மற்றும் இறைச்சிக்கடைகள் மொத்த விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. 30 சதவீத பணியாளர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கவும், சார்பதிவாளர் அலுவலகங்கள் 50 கண்களுடன் பத்திரப்பதிவு செய்து கொள்ளவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50% பணியாளர்களுடன் வழிகாட்டு முறைகளை கடைபிடித்து செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள் மற்றும் அலுவலகம், வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு பராமரிப்பு வேலைகளுக்கு இ-பாஸ் உடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மின் பணியாளர், பிளம்பர், கணினி மற்றும் இயந்திரம் பழுது நீக்குவோர், சுயதொழில் செய்வோர் போன்றவர்களுக்கு இ பாஸ் உடன் காலை 6மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மின் பொருட்கள், பல்புகள், கேபிள்கள் வயர்கள், ஸ்விச் கல் விற்பனை கடைகள், மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் கடைகள், வாகனங்களின் உதிரி பாகம் விற்பனை செய்யும் கடைகள், வாகனங்கள் விநியோகஸ்தர் வாகனங்கள் பழுது பார்க்கும் மையங்கள், ஹார்டுவேர் கடைகள், கல்வி புத்தகங்கள் மற்றும் எழுது பொருள்கள் விற்பனை கடைகள் என இவற்றிற்கு காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வாடகை வாகனங்கள், ஆட்சி மற்றும் ஆட்டோக்களுக்கு இ-பாஸ் உடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் பொது தளர்வுகளும் அனுமதிக்கப்பட்டுள்ளது. அது என்னென்ன? நீலகிரி மாவட்டம், கொடக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக பயணிக்க தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து இ-பாஸ் பெற்று பயணிக்க அனுமதிக்கப்படும்.

கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், கரூர், ஈரோடு, நாமக்கல், திருச்சிராப்பள்ளி மற்றும் மதுரை மாவட்டங்களில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள், ஏற்றுமதி ஆணைகள் வைத்திருப்பின், ஏற்றுமதி தொடர்பான பணிகளுக்காகவும், மாதிரிகள் அனுப்புவதற்காக மட்டும், 10 சதவிகிதம் பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நடமாடும் வாகனங்கள் மூலம் பொது மக்களுக்கு காய்கறி, பழங்கள் ஆகியவை விற்பனை செய்யும் திட்டம், பொது மக்களின் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இது தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

பொது மக்கள் தங்களது வீடுகளுக்கு அருகில் உள்ள கடைகளுக்கு நடந்து சென்று பொருட்கள் வாங்குமாறும், இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் கடைக்கு செல்வதை தவிர்க்குமாறு தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது. மருத்துவர்கள் பரிந்துரைத்தும் தமிழக அரசு மக்களின் நலனை கருத்தில் கொண்டு தளங்களை அளித்துள்ளது. தமிழக அரசின் புதிய தளர்வுகளுடன் ஜீன் 7 முதல் அமலுக்கு வரும் இந்த ஊரடங்கால் கொரோனா தொற்று குறைந்தால் மட்டுமே ஊரடங்குக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.