திமுக ஆட்சி பொறுப்பேற்று ஆறு மாதத்தில் பல்வேறு முறைகேடு, ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி வருகின்றது, சமீபத்தில் மின்சார துறையில் சுமார் 5000 கோடி வரை முறைகேடு நடக்க உள்ளதாகவும், மேலும் 4 சதவிகிதம் கமிஷன் பெற்றது தொடர்பாக சில ஆதரங்களை மின்சார துறை மீது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட நிலையில், தற்போது தீபாவளி பண்டிகைக்கு ஸ்வீட் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
வருடம் தோறும் தீபாவளி பண்டிகையின் போது, அரசு போக்குவரத்து தொழிலார்களுக்கு ஒரு கிலோ ஸ்வீட் மற்றும் காரம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு அதிமுக ஆட்சியில் நெய் கலந்த ஸ்வீட் வழங்கப்பட்டது, இந்த ஸ்வீட் ஒரு கிலோ ரூ. 500 என்று சுமார் நுறு டான் கொள்முதல் செய்யப்பட்டு போக்குவரத்து தொழிலார்களுக்கு கொடுக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது திமுக ஆட்சியில் வருகின்ற தீபாவளிக்கு ஸ்வீட் ஆர்டர் கொடுப்பது குறித்து நடந்த டெண்டர் பேச்சுவார்த்தையில்.
போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மகன் திலீப் தலையிட்டு, இது குறித்து சம்பந்த பட்ட அதிகாரிகளிடம் பேசியுள்ளார். இதற்கு அதிகாரிகள் கடந்த தீபாவளிக்கு நெய் ஸ்வீட் கிலோ ரூ 500 என்று பர்ச்சேஸ் செய்யப்பட்டுள்ளது, இந்த ஆண்டு அதைவிடக் குறைவான விலையில் ஆவினில் வாங்கலாம்’ என்று அமைச்சர் மகனிடம் அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது, ஆனால் இதற்கு அமைச்சர் மகன் மறுப்பு தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து தனக்கு நெருக்கமான நிறுவனம் ஒன்றை சிபாரிசு செய்த அமைச்சர் மகன் திலீப், ஒரு கிலோ ரூ 600க்கு சப்ளை செய்யுங்கள், நெய் கலந்த ஸ்வீட் வழங்கவேண்டும் என்று அவசியம் இல்லை, ஆயில் ஸ்வீட்டாக இருந்தாலே போதும் என்று உத்தரவிட்டுள்ளார். இதற்கு அந்த நிறுவனத்திடம் 30% கமிஷன் பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு அந்த நிறுவனமும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.இதனை தொடர்ந்து சுமார் 100 டன் ஸ்வீட் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஒரு கிலோ ரூ 600 என்றால் மொத்தம் கொள்முதல் ஆறு கோடி ரூபாய் டெண்டர் இது என்றும், அதில் 30% என்றால் ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய்” அமைச்சர் ராகண்ணப்பன் மகன் திலீப்புக்கு கமிஷன் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அரசு போக்குவரத்துத்துறை தொழிலாளர்களுக்கு ஆவின் மூலமாக ஸ்வீட் வழங்கினால் குறைவான விலையில் தரமானதாக இருக்கும். ஆவினில் கிலோ 420 ரூபாய்தான். தனியாரில் ஒரு கிலோ ரூ 600க்கு பர்ச்சேஸ் செய்கிறார்கள். இதனால் சுமார் 1.80 கோடி அரசுக்கு நட்டம் என கூறப்படுகிறது.