விருதுநகர் சட்டமன்ற பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார் பெண்டகன் பாண்டுரங்கன், விருதுநகர் சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம. ஸ்ரீநிவாசன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், 1967 ஆம் ஆண்டு பெரும் தலைவர் காமராசரை தோற்கடித்த திமுகவை தோல்வியடைய செய்ய தான் பாஜக திமுகவை எதிர்த்து விருதுநகர் தொகுதியில் போட்டியிடுவதாக தெரிவித்த பேராசிரியர்.
தென்மாவட்டத்தில் விருதுநகர் தொகுதி வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதியாக உருவெடுத்துள்ளதாக ஊடகங்களில் வரும் செய்தியை சுட்டி காட்டிய பேராசிரியர். விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பளார் பாண்டுரங்கனுக்கு பிரச்சாரம் செய்ய உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விருதுநகர் தொகுதிக்கு வருவதாகவும், மேலும் அணைத்து சமுதாய தலைவர்களும் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்து வருவதாக பேராசிரியர் தெரிவித்தார்.
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று மதுரையில் நடந்த பிரச்சாரத்தில், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மீது ஊழல் குற்றசாட்டு கூறியுள்ளது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பேராசிரியர்,ஊழலில் ஊறி திளைத்த கட்சி திமுக, ABCD யை வரிசை படுத்தினால் C for corruption என்று சொன்னால், அடுத்த வரி D போர் DMK தான், உழலுளுக்கு அகராதி கொடுத்தவர்கள், ஊழலுக்கு புதிய விளக்கம் கொடுத்தவர்கள் திமுக என்றும்.
மேலும் வெகுமதி பெற்று பரிசு பெறுவதெல்லாம் ஊழல் இல்லை என உழலுக்கே வியாக்கினம் செய்த கட்சி திமுக, இது சாதாரண மக்களுக்கு கூட தெரியும், கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு, தான் திருடி ஊரில் உள்ள அனைவரையும் திருடி என்று சொல்வார்கள், அதுபோன்று தான் திருடி திமுக மற்றவர்களை திருடி, திருடி, என கூறி தப்பித்து கொள்ளலாம் என நினைக்கிறது, கூட்டத்தில் ஒருவன் பிட் பாக்கெட் அடித்துவிட்டு மற்றவரை கை காட்டி திருடன் திருடன் என கூச்சலிடுவான்.
அது எதற்கு என்றால் மக்களுக்கு அவன் மேல் சந்தேகம் வராமல் இருக்க அடுத்தவர் பக்கம் மக்கள் பார்வையை திசை திருப்புவதற்காக, அது போன்று ஒரு பிக் பாக்கெட் கட்சி திமுக, அவர்கள் திருடி விட்டு மற்றவர்கள் மேல் குற்றம் சுமத்தி தப்பிக்க நினைக்கிறார்கள் என உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்தார் பாஜக மாநில பொது செயலாளர் பேராசிரியர் ஸ்ரீநிவாசன்.