கொரோனா 2வது அலை தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த சமூக இடைவெளி மற்றும் என்பதால் மேலும் பல கட்டுப்பாடுகள் தமிழக அரசால் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் மார்ச் மாதம் உலகம் முழுவதும் பரவியது கொரோனா வைரஸ். இந்த வைரஸ் தொற்று ஒரு மனிதனிடம் இருந்து இன்னொரு மனிதனுக்கு தும்மல், இருமல், எச்சி மூலம் சமூக தொற்றாக காற்றில் பறக்க விடப்பட்டது.
இதனால் உலகம் முழுவதும் உள்ள மக்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டனர். இதனால் சமூக பரவலை தடுக்க பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்தியாவிலும் கொரோனா சமூக பரவல் வீரியம் அதிகம் அடைந்ததால் இந்தியாவிலும் கடந்த ஆண்டு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்தியா முழுவதும் இ- பாஸ் நடைமுறைக்கு வந்தது. இ – பாஸ் இருந்தால் மட்டுமே ஒரு மாநிலத்தில் இருந்து மற்ற மாநிலங்களுக்கும், மாநிலத்துக்குள் மாவட்டம் விட்டு மாவட்டம் சொல்ல வேண்டும் என்றால் இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டது.
இ- பாஸ் சிலர் தவறாக பயன்படுத்த அதில் இருந்து இ-பாஸ்க்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. ஒருவழியாக டிசம்பர், ஜனவரியில் கொரோனா வைரஸின் சமூக பரவல் குறைந்தால் ஜனவரி முதல் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டது. தற்போது இந்த ஆண்டும் கொரோனாவின் 2அலை வீரியம் அதிகரிக்க வந்த நிலையில் மீண்டும் வழிபாட்டு தலங்கள், மத நிகழ்ச்சிக்கு அரசு தடை விதித்தது.
இதையடுத்து முழு ஊரடங்கு வந்துவிடுமோ என்று மக்கள் எதிர் பார்க்கையில் இன்று மாலை வெளியான செய்தியை கண்டு அனைவரும் அதிர்ச்சியில் உள்ளாக்கியுள்ளது. இரவு நேர ஊரடங்கை அமல் படுத்தியுள்ளது. கடந்த ஆண்டை போல பிறகு மத நிகழ்ச்சிக்கு தடை, 50 சதவீதம் சமூக இடைவெளியுடன் திரையரங்குகள் இயங்கலாம் என்ற கட்டுப்பாடுகள் இருந்துவந்த நிலையில் கொரோனா தாக்கத்தில் தமிழகம் முதல் 5 இடத்துக்கு வந்தது. இதனால் உடனடியாக ஆலோசனை கூட்டம் நடத்திய எடப்பாடி, அதிரடி உத்தரவுகளை வெளியிட்டார்.
அதில் ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகளில் எந்த மாற்றமில்லை, ஆனால் மேலும் புதிய கட்டுப்பாடுகள் வெளியாகின. இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவிட்டார். மேலும் கொரோனா தாக்கத்தால் +2 தேர்வு ரத்து என தமிழக அரசு ஊரடங்கு உத்தரவு படி படியாக உயர்த்தி வருகிறது. எனவே அரசின் உத்தரவுகளை அலட்சியமாக எடுத்து கொள்ளாமல் அதை கடைபிடித்தால் அல்ல கொரொனா வைரஸ் தொற்றிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். மாஸ் அணியுங்கள், வெளியில் சென்று வந்த பிறகு உங்கள் கைகளை சுத்தமாக கழுவிவிட்டு வீட்டிற்கு சொல்லுங்கள்.