நடிகர் தனுஷ் நடிப்பில், இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் கர்ணன், இந்த படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக முன்னால் முதல்வர் கருணாநிதி ஆட்சி பற்றி தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக திமுகவினரிடம் இருந்து எதிர்ப்பு குரல் ஒலித்து வருகிறது, அந்த வகையில் திமுக தகவல் தொழில்நுட்ப ஆலோசகர் மனுஷ்ய புத்திரன் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
அவரை தெரிவித்துள்ளதாவது, ’’ உளியின் ஓசை மாதிரி படம் எடுங்கன்னா அந்தக் கலவரம் இந்தக் கலவரம் என படம் எடுத்துகிட்டு’ என கரணன் திரைப்பட சர்சை தொடர்பான கிண்டல் பதிவுகளை பார்த்தேன். மொண்ணைகளோடு சண்டையிடகூடாது என எவ்வளவுத்தான் வைராக்கியமாக இருந்தாலும் முடியாது போலிருக்கிறது. ‘ கர்ணன்’ திரைப்படத்தில் தம்பி மாரி செல்வராஜ் செய்திருப்பது அப்பட்டமான வரலாற்றுபிழை.
ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் நடந்த கொடியங்குள போலீஸ் வன்முறையை கலைஞர் ஆட்சிக் காலத்தில் நடந்ததாகக் காட்டுவது தவறு என்று சுட்டிகாட்டினால் அதற்கு யோக்கியமான பதில் வேண்டும். பரியேறும் பெருமாள் வந்தபோது மாரி செல்வராஜை கொண்டாடியவன் நான். ரஞ்சித்தை விடவும் மாரி செல்வராஜையே முக்கியமான தலித் சினிமாஅழகியலை முன்னெடுக்கும் இயக்குனராக பார்க்கிறேன். கர்ணன் இன்னும் பார்க்கவில்லை. ஆனால் அவர் இந்தப்படத்தில் செய்திருக்கும் வரலாற்றுத் தவறு எந்தவிதத்திலும் நியாயப்படுத்தகூடியதல்ல.
நான் கொடியங்குளம் வன்முறைக்குபிறகு சில நாட்களில் அங்கு சென்று மக்களை சந்தித்து அங்கு நடந்த கொடுமைகள் பற்றி விரிவான நேர்காணல் எடுத்திருக்கிறேன். அப்போது அது காலச்சுவடு இதழில் வெளிவந்திருக்கிறது. சமகாலத்தில் நடந்த, நேரடி சாட்சிகள் உயிரோடு இருக்கும்போதே இத்தகைய திரிபுகளை செய்தால் என்ன நியாயம்? நியாயமாக இதற்குள் இந்தக் காட்சிகள் மாற்றப்பட்டிருக்க வேண்டும். மாரி செல்வராஜ் அதற்காக வருத்தம் தெரிவித்திருக்க வேண்டும். ஏனோ அவர் அதை செய்யவில்லை. மாறாக அவரது ஆதரவாளர்கள் உளியின் ஓசையை கிண்டலடிக்கிறார்கள். உளியின் ஓசை ஒன்றும் அம்பேத்கரின் வரலாறு குறித்த தவறான தகவல்களைக்கொண்ட படம் அல்லவே. அதற்கும் இந்தப்பிரச்சினைக்கும் என்ன சம்பந்தம்.?
தம்பி மாரி செல்வராஜ்… உங்களை மிகுந்த தோழமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.. இந்த மொண்ணைகள் தரும் ஆதரவால் உங்கள் தவறை நியாயப்படுத்திக் கொள்ளாதீர்கள்…நீங்கள் மிகச்சிறந்த கலைஞன். அந்தத்தவறை படத்தில் சரி செய்த்தால் கலைஞனாக உங்கள் நேர்மை மென்மேலும் மிளிரும் . மாறாக இதையும் ஒரு விளம்பரம் என்று எடுத்துகொண்டு அமைதியாக இருந்தால் உங்களது வருங்கால படங்களின் நம்பகத்தன்மை கேலிக்கூத்தாகிவிடும். யோசியுங்கள் என திமுக முக்கிய தலைவர் மனுஷ்ய புத்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.