வெடித்தது சர்ச்சை..நிதி அமைச்சருக்கு நெத்தியடி.! பேரா அன்பழகன் என்பவர் பேராசிரியரா.?

0
Follow on Google News

தமிழக நிதி அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன் சமீபத்தில் ஒரு பேட்டியில் அவர் பேசிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது, அதில் பாஜக பொது செயலாளர் பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசன் குறித்து பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது, இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் திராவிட மாயை ஒரு பார்வை என்கிற புகழ் பெற்ற புத்தகத்தை எழுதிய அதன் ஆசிரியர் சுப்பு மணியன் கூறியதாவது.

மதுரையில் வாழ்ந்த பி.டி.ராஜன் பாரம்பரியமிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர், பக்தர். நீதிக் கட்சியை ஈவெராவிடம் ஒப்படைக்கக் கூடாது என்று இறுதிவரை போராடி தனியாக நின்று களம் கண்டவர். ஆமாம்.தற்போதைய தமிழக நிதியமைச்சரின் தாத்தா தான் அவர் . “பிடி ராஜன் நடத்திய நீதிக்‌ கட்சி நூற்றாண்டு விழாவுக்கு போகக்கூடாது என்று முதலமைச்சர் அண்ணாதுரையை ஈவெரா தடுத்த போது, அதை அண்ணாதுரை மதிக்கவில்லை.

அண்ணாதுரை அந்த விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினர் என்ற விஷயம் வரலாற்று ஏடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தவிர மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்ற போது, எப்படியாவது காஞ்சி மஹா ஸ்வாமிகளின் ஆசிர்வாதத்தோடு அது நடைபெற வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தவர் பி.டி. ராஜன் என்கிற வரலாற்று சம்பவத்தை சுட்டி காட்டிய ஆசிரியர் சுப்பு மணியன்.

மேலும், இப்போது தமிழக நிதி அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டிருக்கும் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பாஜகவினுடைய மாநிலப் பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசனைப் பற்றித் தரக் குறைவாகப் பேசுகிற வீடியோ ஒன்று வெளியிடப் பட்டிருக்கிறது. ” “ஸ்ரீநிவாசன் பேராசிரியரா” என்று இவர் கேலி செய்கிறார். நல்லது. யாரெல்லாம் பேராசிரியர் என்பது ஆராயப்பட வேண்டிய விஷயம்தான்.

இரண்டாவது முறையாக சட்டமன்றத்திற்குள் நுழையும் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனுக்கு நேரம் இருக்கும் போது பேரா அன்பழகன் என்பவர் பேராசிரியரா என்ற சர்ச்சையில் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும், திமுக உறுப்பினர்களுக்கும் நடந்த விவாதங்கள் எல்லாம் சட்டமன்ற அவைக் குறிப்புகளில் பதிவாகியிருக்கும். தேடிப் பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது என் எதிர்வினை. அதன்பிறகு விவாதத்தைத் தொடரலாம் என தெரிவித்துள்ளார் ஆசிரியர் சுப்பு மணியன்.

இந்நிலையில் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதின் விளைவாக திமுக மூத்த தலைவரும், திமுக பொதுச் செயலாளராக இருந்த மறைந்த பேராசிரியர் அன்பழகன் குறித்து அவர் பேராசிரியரா என்கிற சர்ச்சை மீண்டும் வெடிக்க தொடக்கியுள்ளதால், இது குறித்த சர்ச்சை தொடர்பாக கடந்த கால சம்பவங்களை பலர் எடுத்துரைத்து வருவது திமுக தலைமையை தர்ம சங்கட்டத்துக்கு உள்ளாகியுள்ளது குறிப்பிடதக்கது.