சமீபத்தில் மதபோதகர் ஜார்ஜ் பொன்னையா பேசிய பேச்சுக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது, அதில். திமுக அமைச்சர் சேகர் பாபு. , அமைச்சர் மனோ தங்கராஜ் ஒன்று சொல்கிறேன் நீங்கள் எத்தனை கோவிலுக்கு குடமுழுக்கு கொடுத்தாலும், எத்தனை கோவிலுக்கு துணி உடுத்தாமல் சாமி நீங்கள் கும்பிட்டாலும், ஒருத்தன் கூட உங்களுக்கு ஓட்டு போட மாட்டான். மண்டைக்காடு பக்தனும் உங்களுக்கு போட போடுவது கிடையாது, இந்துக்களும் உங்களுக்கு ஒட்டு போட போடுவது கிடையாது.
நீங்கள் வெற்றி பெற்றது கிறிஸ்துவ மக்களும், முஸ்லிம் மக்களும் உங்களுக்கு போட்ட பிச்சை என்பதை மறந்து விட வேண்டாம். உங்களுடைய திறமையை வைத்து நீங்கள் ஓட்டு வாங்கவில்லை. உங்களுக்கு ஓட்டு போடச் சொன்னது எங்களுடைய ஆயர்கள், கிறிஸ்தவ ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று உங்களுக்கு ஓட்டு போடச் சொன்னார்கள். பாஜக சார்பில் வெற்றி பெற்ற எம் ஆர் காந்தி செருப்பு போட மாட்டான், கேட்டால் பூமாதேவியை செருப்பு போட்டு மிதிக்க மாட்டானாம், ஆனால் நாம சூ போட்டது எதற்கு பாரதமாதா ஒரு அசிங்கம் அது நம்மை தோற்று விடக் கூடாது என்பதற்காக தான்,
மேலும் நமக்கு சொரி சிரங்கு எல்லாம் வந்து விடக்கூடாது என்பதற்காக தமிழக அரசு இலவச செருப்பு கொடுத்துள்ளது. இந்த பூமாதேவி ரொம்ப டேஞ்சரஸான ஆளு, சொரி, சிரங்கு பிடிக்கும் அதனால செருப்பு போட்டுக்கணும். நாங்கள் இப்போது 40 சதவிகிதத்தில் இருந்து 62 சதவீதமாக வந்துவிட்டோம், இன்னும் சில காலங்களில் 70 சதவீதமாக வந்து விடுவோம், எங்களை யாரும் தடுக்க முடியாது. இதை எச்சரிக்கையாக இந்து சகோதரர்களுக்கு சொல்ல விரும்புகின்றேன்.
மோடியின் கடைசி காலம் மிக மிக பரிதாபமாக இருக்கும், எழுதி வைத்துக் கொள்ளுங்கள், நாம் நம்புகின்ற கடவுள் உயிரோடு இருக்கிறார் என்றால் அமித்ஷா, மோடியை நாயும், புழுவும் சாப்பிடும் நிலையை வரலாறு காண வேண்டும். எங்கள் சாபம் உன்னை அழிக்கும் என எச்சரித்து இருந்தார். இந்த சர்ச்சைக்குரிய பேச்சுக்கு நடவடிக்கை எடுக்க தமிழகம் முழுவம் புகார் கொடுக்கப்பட்டு வரும் நிலையில். இந்திய இஸ்லாமிய முன்னேற்ற கூட்டமைப்பு சார்பில் சென்னை மயிலாப்பூர் காவல் தலைமை இயக்குனருக்கு புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த புகார் மனுவில் தெரிவித்ததாவது, ஐயா கடந்த இரு தினங்களுக்கு முன்பு நாகர்கோவிலிலை சார்ந்த
மதபோதகர் ஜார்ஜ் பொன்னையா அவர்களின் பேச்சு தேச ஒற்றுமையை சீர்குலைக்கும் விதமாக ஒரு மதத்தினரை மனம் புண்படும் விதமாக பேசியதும் மாண்புமிகு பாரதப் பிரதமர்யும் மாண்புமிகு அமைச்சரையும் சட்டமன்ற உறுப்பினருக்கும் தரக்குறைவாக பேசிய இவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுத்து மீண்டும் இது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட கூடாது என்பதற்கு முன் உதாரணமாக இந்த நடவடிக்கையை நீங்கள் எடுத்திட தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் அந்த புகார் மனுவின் இறுதியில் குறிப்பு என குறிப்பிட்டு, முஹம்மது நபி அவர்களை அவதூறாக பேசிய கல்யாணராமன் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது
குறிப்பிடத்தக்கது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என அஞ்சிய மதபோதகர் ஜார்ஜ் பொன்னையா தலைமறைவாக இருந்து வருவதாக கூறப்படுகிறது.