பிரபல ஆபாச பேச்சாளர் சுந்தரவல்லி சமீபத்தில் வன்முறையை தூண்டும் விதத்தில் அவருடைய சமூக வலைதளத்தில் கார்ட்டூன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. ஆபாச பேச்சாளர் சுந்தரவல்லி இது போன்று செயல்படுவது இது முதல் முறையல்ல இது போன்று தொடர்ந்து வன்முறையை தூண்டும் விதத்திலும், ஆபாசமாக அநாகரிகமாக தனது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றவர்.
தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சுந்தரவல்லி. எதிர் தரப்பில் இருந்த பாஜகவை சேர்ந்த பெண் ஒருவருக்கும் இவருக்கும் இடையில் நடந்த விவாதத்தின் போது கட்டுப்பாடுகளை இழந்து அநாகரிகமாக பேசியதை தொடர்ந்து, எதிர் தரப்பில் இருந்த பாஜகவை சேர்ந்த பெண் சுந்தரவல்லியை பஜாரி என்று அழைத்தார். இது சமூக வலைதளத்தில் வைரலானதை தொடர்ந்து சுந்தரவல்லி பிரபலமானார், அவரை தொடர்ந்து இந்து தமிழர் கட்சி தலைவர் இராம ரவிக்குமாரை விவாத நிகழ்ச்சியில் அநாகரிகமாக பேசிய சுந்தரவல்லி பேச்சுக்கள் மிக பிரபலமானது இதில் இருந்து சுந்தரவல்லி மீது ஆபாச பேச்சளார் என்கிற முத்திரை விழுந்தது.
சுந்தரவல்லி தொடர்ந்து இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசி வர கூடியவர். புல்வாமா பயங்கரவாத தாக்குதலின் போது இறந்த ராணுவ வீரர்களை பிரதமர் தனது சுய லாபத்துக்கு படுகொலை செய்ததாக வீடியோ வெளியிட்ட சுந்தரவல்லி பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு ஆதரவாகவும் பேசியிருந்தார். இது தொடர்பாக பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் சுந்தரவல்லி மீது வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்படத்தக்கது.
இந்நிலையில் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கார்ட்டூன் ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில் பிராமண சமூகத்தில் இழிவு செய்வது போன்று அந்த கார்ட்டூனை வெளியிட்டுள்ளார். இது ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இழிவு செய்வது மட்டும் இல்லாமல் வன்முறையை தூண்டுவது போன்று அமைந்துள்ளதால் தமிழக அரசு சட்டப்படி ஆபாச பேச்சாளர் சுந்தரவல்லி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும் திமுக ஆட்சிக்கு வந்த பின்பு தொடர்ந்து சமூக வலைதளத்தில் கருத்து தெரிவிக்கும் எதிர் கட்சியை சேர்த்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நள்ளிரவில் கைது நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த நிலையில், வன்முறையை தூண்டும் விதத்தில் சுந்தரவல்லி பதிவு செய்துள்ளதற்கு திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அப்படி இல்லையென்றால் சுந்தரவல்லி பின்னின்று திமுக இயக்குவதாக மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடதக்கது.