100 நாட்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் இந்து சமய அறநிலைத்துறை ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சுப் பி.கே.சேகர்பாபு பத்திரிக்கையாளர்களை சந்தித்தபோது கூறினார். சென்னை நுங்கம்பாக்கத்தில் இந்து சமய அறநிலைத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் உதவி ஆணையர், துணை ஆணையர், செயல் அலுவலர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் அமைச்சர் பி.கே.சேகர் : திமுக ஆட்சிப் பொறுப்பினை ஏற்றிய திலிருந்து வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுவதாக கூறினார். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்யப்படும், பக்தர்களுக்கு இந்த தகவலை தெரிவிக்க அனைத்து இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் இங்கு தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்று அறிவிப்பு பலகைகள் வைக்கப்படும்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டம் 100 நாட்களுக்குள் நிறைவேற்றப்படும். பெண்களும் அர்ச்சகர் ஆக விரும்பினால் அவர்களுக்கு சாரியான பயிற்சிகள் வழங்கப்பட்டு அர்ச்சகர் பற்றாக்குறையான கோயில்களில் நியமிக்கப்படுவார்கள்.
தமிழகத்தில் 30 கோயில்களில் உள்ள யானைகளை பாதுகாக்க மருத்துவர்கள் அடங்கிய இந்து சமய அதிகாரிகள் குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக முதல்வரும் மதம் சார்ந்த விஷயங்களில் யாருடைய மனதையும் புண்படுத்த கூடாது என்று கூறியுள்ளார். வீரர்கள் நியமனம் எப்போது உள்ள நடைமுறையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு கூறினார்.