நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மீது கடும் அதிருப்தியில் முதல்வர் முக ஸ்டாலின் இருப்பதாக திமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், சமீபத்திய முதல்வரின் அதிரடி நடவடிக்கைள் அதை உண்மையென நிரூபிப்பது போன்று அமைந்துள்ளது. 2016 சட்டசபை தேர்தலுக்கு பின் திமுக ஐடி பிரிவு தலைமை பொறுப்பு பழனிவேல் தியாகராஜனுக்கு கொடுக்கப்பட்டது, ஆனால் முரசொலி மூல பாத்திரம், முக ஸ்டாலின் மிசா கைது போன்ற பெரும் சர்ச்சைகளை எதிர்கொள்ள முடியாமல் திணறியது PTR தலைமையிலான திமுக ஐடி பிரிவு.
இந்நிலையில், இவரை நம்பி பயனில்லை என உணர்ந்த திமுக தலைமை ஐபெக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் சந்தித்து வெற்றி பெற்றது. இந்நிலையில் தற்போது நிதி அமைச்சராக இருந்து வரும் பழனிவேல் தியாகராஜன் செயல்பாடுகள் மீது முதல்வர் முக ஸ்டாலின் அதிருப்தியில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. மற்ற அமைச்சர்கள் சார்ந்த துறைகளில் தேவையின்றி PTR மூக்கை நுழைப்பது அந்த துறையை சார்ந்த அமைச்சர்களும் அதிருப்தி அடைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து தற்போது தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்க முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், பொருளாதார நிபுணர் அரவிந்த் சுப்பிரமணியன், நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் எஸ்தர் டப்ளோ, ராஞ்சி பல்கலைக்கழகம், டில்லி ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸின் ஜீன் ட்ரெஸ், முன்னாள் நிதித்துறை செயலர் எஸ்.நாராயணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அமேரிக்காவில் பட்ட படிப்பு படித்து, பெரும் நிறுவங்களின் பணியாற்றி கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கியதாக தற்பெருமை பேசி வரும் PTR பழனிவேல் தியாகராஜன் நிதி அமைச்சராக இருக்கும்போது எதற்காக பொருளாதார ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது என பல்வேறு சர்ச்சை எழுந்துள்ள நிலையில், நிதி அமைச்சர் மீது முதல்வர் அதிருப்தியில் இருந்து வருவதாக சில தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அதில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செயல்பாடுகள் பல குழப்பங்களை உருவாக்கி மேலும் சிக்கலை உருவாக்குவது போன்று முதல்வர் உணரர்வதாகவும். மேலும் மூத்த அமைச்சர்கள் பலர், இந்த அமேரிக்கா தம்பியை கொஞ்சம் தட்டி வைங்க, தேவையின்றி எங்கள் துறைகளில் தலையிட்டு அவர் ஒரு முதல்வர் போன்று செயல்படுவதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மீது புகார் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போதைக்கு அமைச்சரைவையில் மற்றம் கொண்டு வருவது சரியாக இருக்காது என முடிவு செய்த முதல்வர் பொருளாதார ஆலோசனைக் குழு அமைத்து அந்த குழுவுக்கு அதிகாரத்தை வழங்கி நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை டம்மியாக்கி உள்ளதாக கூறப்படுகிறது.