குடியுரிமை விவகாரம்.. PTR அமைச்சர் பதவி பறிக்க படுகிறதா.? சமிக்கை கொடுத்த H.ராஜா..

0
Follow on Google News

புதியதாக ஆட்சியில் அமைந்துள்ள திமுக அமைச்சர்களில் தொடர்ந்து பெரும் சர்ச்சையில் சிக்கி வருகிறார் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். இவர் அமைச்சர் ஆவதற்கு முன்பு பேசிய வீடியோக்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி நிதி அமைச்சருக்கு எதிராக கடும் விமர்சனம் எழுந்து வருகிறது, இதில் தற்போது அமைச்சரவையில் இடம் பெற்ற பின் ஜாக்கி வாசுதேவ் பற்றி அவர் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை வெடித்துள்ளது.

இந்நிலையில் தற்போது சமூக வலைதளத்தில் நிதி அமைச்சர் குறித்து ஒரு தகவல் வைரலாகி வருகிறது, அதில், நிதி அமைச்சராக இருக்கும் பழனிவேல் தியாகராஜன் இந்திய குடியுரிமையை சரண்டர் செய்துவிட்டு, வெளிநாட்டு குடியுரிமை பெற்றுவிட்டார் என்றும், இப்போது OCI (Overseas citizen of india) அடையாள அட்டை கொண்டவர், இது போன்ற நபர் இந்திய அரசியல் அமைப்பு சட்டபடி தேர்தலில் போட்டியிட கூடாது என்றும்.

மேலும், OCI பெற்ற நபர், இந்திய குடியுரிமையாக இருக்க முடியாது, அந்த நபர்கள் அரசு துறையில் பணியாற்ற முடியாது, தேர்தலில் போட்டியிட முடியாது, ஆகையால் OCI card holderஆக இருக்கும் பட்சத்தில் இவரை தகுதி நீக்கம் செய்து சட்டப்படி 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், பிறகு இவர் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மீறியதன் காரணமாக, இந்திய மண்ணில் வாழ தகுதி அற்றவர் என்று சான்றழித்து நிரந்தரமாக நாடு கடத்தலாம் என ஆதாரமற்ற ஒரு தகவல் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இது குறித்து வலைதளவாசி ஒருவர், நிதி அமைச்சர் தியாகராஜன் இந்திய குடிமகன் இல்லையென்று செய்திகள் வருகிறதே அது உங்கள் கவனத்திற்கு வந்ததா அதன்மீது என்ன நடவடிக்கை எடுக்க போகிறீர்கள் என பாஜக மூத்த தலைவர் H.ராஜாவிடம் கேள்வி எழுப்ப, Wait and see என்று பதிலளித்துள்ளார் H.ராஜா. இந்நிலையில் இந்த விவகாரம் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், பழனிவேல் தியாகராஜன் பேசிய பழைய வீடியோ ஓன்று தற்போது வைரலாகி வருகிறது.

அதில் அவர் சுமார் 20 வருடங்கள் அமெரிக்காவில் வசித்து வந்தாலும், அந்த நாட்டு குடியுரிமையை அவர் பெறவில்லை என்றும், அதே போன்று 5 வருடங்கள் சிங்கப்பூரில் வசித்து வந்துள்ளார் அப்போது அவர் அந்த நாட்டின் குடியுரிமையை பெற வில்லை என தெரிவித்துள்ளார், மேலும் அவர் தொடர்ந்து இந்திய பிரஜையாகவே உலகம் முழுவதும் சுற்றி வந்துள்ளார் என்பதை அந்த வீடியோவில் பழனிவேல் ராஜன் பேசியிருந்தது குறிப்பிடதக்கது.