தனது மகளை அரசு பள்ளியில் சேர்த்த சினிமா விநியோகஸ்தர்.! உச்ச நடிகர்கள் இதை பின்பற்றுவார்களா.?

0
Follow on Google News

பிரபல சினிமா வினியயோகஸ்தர் மற்றும் நடிகர் ஜெயம் SK கோபி தந்து மகளை அரசு பள்ளியில் சேர்த்துள்ளார். அரசு பள்ளியில் தனது மகள் சாதனாவை (வயது4) சேர்க்க சொந்த வீட்டிலேயே எதிர்ப்பு வந்தாலும் அந்த எதிர்ப்பை மீறீ அவர்களுக்கு உண்மையை எடுத்துரைத்து என் மகளை அரசுப்பள்ளியில் சேர்க்கிறேன் என தெரிவித்துள்ளார் ஜெயம் SK கோபி.

மேலும் மகளை அரசு பள்ளியில் சேர்த்தது குறித்த காரணம் பற்றி அவர் தெரிவித்ததாவது, பொதுவாகவே அரசுப்பள்ளியில் படிக்கும் 99சதவீத மாணவ மாணவிகளுக்கு தன்னம்பிக்கையும் தைரியமும் இயற்கையாகவே உருவாகிறது.எல்லா சூழ்நிலையையும் அவர்கள் கற்றுக்கொள்கிறார்கள் மற்றும் சென்னை போன்ற பெரு நகரங்களில் உள்ள அரசுப்பள்ளிகளின் தரம் பெருமளவு உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழ் அல்லாத பிற மொழிகளையும் மற்ற பாடங்களையும் உங்கள் விருப்பத்திற்கேற்ப டியூஷன் வைத்து கற்றுக்கொடுங்கள்.இது அவர்களை இன்னும் மேம்படுத்தும்.. கெளரவம் என்ற இந்த ஒற்றை வார்த்தையை வைத்தே தனியார் பள்ளிகளில் தங்களுடைய குழந்தைகளை சேர்க்கும் தாக்கம் அதிகமாக பெற்றோர்களிடம் காணப்படுகின்றன.. அதிமுக அல்லது திமுக எந்த ஆட்சியாக இருந்தாலும் அரசு பள்ளிகளின் தரத்தை அவர்கள் அதிகளவு உயர்த்த முயற்சிக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை…

தற்போது தமிழத்தில் உள்ள அரசு பள்ளிகளில் சேர்க்க நினைக்க விரும்பு பெற்றோர்களுக்கு ஒரு சலுகையையும் கொடுத்துள்ளது. அதாவது தங்கள் குழந்தைகள் தனியார் பள்ளியில் படித்து கொண்டிருக்கும் அவர்களை அங்கிருத்து வெளியேற்றி அரசு பள்ளியில் சேர்க்கும் போது T.C வேண்டாம் எனவும் சொல்லப்படுகிறது.. ஆகையால் இது சரியென்று உணரும் என் நண்பர்கள் உங்களுடைய குழந்தைகளையும் உங்கள் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் சேருங்கள்…

இப்படி அனைவரும் சேர்க்கும் போது உறுதியாக அரசு பள்ளிகளின் தரத்தை தமிழக அரசு மேலும் உயர்த்தும் என ஜெயம்SKகோபி தெரிவித்துள்ளார். வசதி படைத்த இவர் தனது குழந்தையை அரசு பள்ளியில் சேர்த்ததற்கு பலர் பாராட்டும் தெரிவித்து வருகின்றனர், சமூக அக்கறை குறித்து கருத்து தெரிவித்து வரும் உச்ச நடிகர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்து முன்னுதாரமாக இருக்க வேண்டும் என பலர் கோரிக்கை வைத்து வருவது குறிப்பிடதக்கது.