தமிழக முதல் அமைச்சர் முக ஸ்டாலின் கடந்த 17ம் தேதி இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றார். தனி விமானம் மூலம் டெல்லி சென்ற முதல்வருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் ஆகியோர் உடன் சென்றனர். செல்லி சென்று முதல்வர் ஸ்டாலின், டெல்லியில் கட்டப்படும் திமுக அலுவல பணிகளை பார்வையிட்டார். இதை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து சில முக்கியமான ஆலோசனைகளை மேற்கொண்டார்.
பிரதமர் உடனான சந்திப்பின் போது, முதல்வருடன் அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட சிலர் பங்குபெற்றனர். சுமார் 25 நிமிடம் நடைபெற்ற இந்த ஆலோசனை முடிவுக்கு பின் மத்திய உள்த்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை முதல்வர் சந்திப்பதாக செய்திகள் வெளியானது, ஆனால் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை மட்டும் சந்தித்த முக ஸ்டாலின் தமிழகம் திரும்பினார்.
இந்நிலையில் மத்திய உள்துறை மற்றும் நிதியமைச்சர் உடன் முதல்வர் சந்திப்பு இல்லாதது பற்றி டெல்லி வட்டாரத்தில் விசாரித்ததில் சில தகவல் வெளியாகி உள்ளது. அதில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் டெல்லி பயணத்தின் போது மத்திய உள்த்துறை அமைச்சர். அமித்ஷா, மற்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியரை சந்திக்க நேரம் கேட்க்கப்பட்டதாக கூறபடுகிறது, ஆனால் இரு தரப்பில் இருந்து எந்த ஒரு தகவலும் இல்லை என கூறபடுகிறது.
இந்நிலையில் பிரதமர் மோடி உடன் மட்டுமே முதல்வர் சந்திக்க நேரம் கிடைத்த நிலையில் டெல்லி சென்ற முதல்வர், அங்கே சென்றதும் மத்திய உள்துறை மற்றும் நிதியமைச்சர்களை சந்திக்க முயற்சிக்கலாம் என்ற நம்பிக்கையில் டெல்லி சென்றுள்ளார், ஆனால் உள்துறை அமைச்சகத்தில் இருந்து முதல்வர் முக ஸ்டாலின் சந்திக்க நேரம் கேட்டிருந்ததை பற்றி கண்டுகொள்ளவே இல்லை என கூறபடுகிறது, ஆமாம், இல்லை என்கிற பதில் கூட இல்லை என கூறபடுகிறது.
இதனை தொடர்ந்து வந்தது வந்துட்டோம் நிதியமைச்சர் நிர்மலா சித்தராமனை மட்டுமாவது சந்தித்து விட்டு செல்வோம் என நேரம் கேட்டு காத்திருந்த முதல்வர், காத்திருந்து, காத்திருந்து அங்கே இருந்து எந்த ஒரு தகவலும் வராத நிலையில். பிரதமரை மட்டும் சந்தித்த மகிழ்ச்சியில் மற்ற அமைசர்கள் அமித்ஷா மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்திக்க நேரம் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் தமிழகம் திரும்பினார் முதல்வர் முக ஸ்டாலின் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.