கடந்த ஆண்டு தேவர் குருபூஜையை கலந்து கொண்ட அப்போதைய எதிர்கட்சியாக இருந்த முக ஸ்டாலின் சர்ச்சையில் சிக்கியது போன்று தற்போது முதல்வராக சென்று இந்த வருடமும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.கடந்த வருடம் தேவர் ஜெயந்தி அன்று, பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் ஸ்டாலின், அப்போது அங்கு அவருக்கு விபூதி அளிக்கப்பட்டது.
அதை நெற்றியில் பூசாமல் பெயரளவில் கழுத்தில் தடவிக் கொண்ட முக ஸ்டாலின் , மீதமிருந்த விபூதியை கீழே கொட்டிவிட்டதாக கூறப்பட்டது. ஸ்டாலின் விபூதியை கீழே கொட்டும் வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையை அப்போது ஏற்படுத்தியது. அதே போன்று இந்த வருடம் நடந்த தேவர் குருபூஜையில் கலந்து கொண்ட முதல்வர் முக ஸ்டாலின், ராமநாதபுரம் பசும்பொன்னில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
பூசாரி காண்பித்த தீபத்தை தொட்டு கும்பிட்ட முதல்வர் முக ஸ்டாலின் விபூதியை தவிர்த்தார், அவரை தொடர்ந்து பெருபாலான அமைச்சர்கள் விபூதியை தவிர்த்தனர், இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்த வீடியோவை பகிர்ந்த பாஜக மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் பி செல்வம், விபூதியை தட்டிவிட்டா தான பிரச்சனை வரும்? விபூதியை வாங்காமலேயே பிரச்சனைக்கே எப்படி விபூதி அடிச்சார் பார்த்தீங்களா என தனது டிவீட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
மேலும் முதல்வர் முக ஸ்டாலின் மலர்வளையம் வைத்துள்ளதும் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது, இறந்தவர்கள் மற்றும் சமாதிகளில் வைத்து மரியாதை செய்ய கூடிய மலர்வளையம் கோவில் போல் வழிபட்டு வரும் தேவர் நினைவிடத்தில் முதல்வர் வைத்துள்ளது சர்ச்சையாக வெடித்துள்ளது. இந்நிலையில் எதற்கு மலர்வளையம் வைத்தார், கோவில் நிர்வாகம் எப்படி அனுமதித்தது ? என பாஜக ஐடி பிரிவு மாநில தலைவர் CTR நிர்மல்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.