இளைஞர்களின் நம்பிக்கைக்குரிய சென்னை தமிழச்சி பத்மபிரியா அதிரடி அறிவிப்பு..! அதிர்ச்சியில் கமல்ஹாசன்..

0
Follow on Google News

சுற்றுச்சூழல் ஆர்வலரும், சென்னை தமிழச்சி என்கிற அடைமொழியுடன் சமூக வலைதளத்தில் பிரபலமான பத்மப்ரியா, கடந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்டார், 25 வயதான இளம் வேட்பாளரான இவர் போட்டியிட்ட முதல் சட்டமன்ற தேர்தலில் 33, 401 வாக்குகளைப்பெற்று மூன்றாம் இடத்தைப்பிடித்து, திமுக, அதிமுக போன்ற பெரும் கட்சிகளுக்கு சவாலாக இருந்துள்ளார்.

சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்து தனது வலுவான கருத்துக்களை முன் வைப்பதில் தீவிரமாக செயல்பட்டு வரும் இவர் , ‘சென்னை தமிழச்சி’ என்ற பெயரில் தனிப்பட்ட முறையில் யூடியூப் சேனல் மூலம் மக்களிடத்தில் தனக்கென ஒரு செல்வாக்கை பெற்றுள்ளார், இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட பத்மப்ரியா கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.அவர் தனது டிவீட்டர் பக்கத்தில்.

அன்பு நிறைந்த மதுரவாயல் தொகுதி மக்களுக்கு , என் மீது நம்பிக்கை கொண்டு எனக்கு வாக்களித்த மக்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன், என்னைப் போல் எவ்வித அரசியல் பின்புலம் இல்லாத ஒரு நடுத்தர குடும்பப் பெண்ணை உங்கள் வீட்டுப்பிள்ளையாக எண்ணி ஏற்றுக்கொண்டு வாக்களித்தமைக்கும் நம்பிக்கை கொடுத்து ஊக்கம் கொடுத்தமைக்கும் நான் என்றும் உங்களுக்கு கடமைப்பட்டுள்ளேன்.

சில காரணங்களுக்காக நான் சார்ந்திருந்த மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக முடிவு செய்துள்ளேன். அதை எனது தொகுதி மக்களான உங்களுடன் பகிர்வது எனது கடமை என்று கருதி தெரிவித்துக்கொள்கின்றேன். எனது களப்பணி எப்போதும் போல இன்னும் சிறப்பாக தொடரும். என சென்னை தமிழச்சி பத்மபிரியா தெரிவித்துள்ளார், இவருக்கு கட்சிக்கு அப்பாற்பட்டு இளைஞர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்து வருவதால் இவர்கள் மக்கள் நீதி மையம்கட்சியில் இருந்து விலகியுள்ளது முக்கியதுவம் பெற்றுள்ளது.