கர்நாடக மாநிலத்தில் பட்டியலினத்தவர்களும், ஏழைகளும் அதிகளவில் மதமாற்றம் செய்யப் படுவதாக புகார் எழுந்தது. கட்டாய மதமாற்ற புகாரில் கிறிஸ்தவ பாதிரியார்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 5 ஆண்டுகளில் மதம் மாறியவர்கள் தொடர்பான தகவல்களை திரட்டுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு கர்நாடக அரசு உத்தவிட்டது. இதைத் தொடர்ந்து கட்டாய மதமாற்ற தடை சட்டம் கொண்டுவர முடி வெடுக்கப்பட்டு கர்நாடக சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடரில் மதமாற்ற தடை சட்ட மசோதா அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சட்டம் முன்பே இருந்த சில மதமாற்ற ஏமாற்றங்களை தடுக்கும் சட்டத்தின் புதிய வடிவம். இந்த சட்டபடி ஒருவரை ஆசைகாட்டியோ, பொருளோ, வேலைவாய்ப்போ இதர விஷயங்களை காட்டியோ மதம் மாற்ற முடியாது. கூட்டாக மதம் மாற்றுவது, இன்னொரு மதத்தை வெறுக்கும்படி தூண்டி மதம் மாற்றுவது போன்றவை சட்டபடி நடவடிக்கை எடுக்கப்பட்டு தடுக்கப்படும், மேலும் இதை செய்வோருக்கு தண்டனை வழங்கபடும்.
அதாவது ஆத்மார்த்தமாக மதம் மாறாமல் நிர்பந்தம், மூளை சலவை, ஒருவனின் ஏழ்மை அல்லது சூழலை பயன்படுத்தி அவனை குழப்பி ஆசைகாட்டி இழுத்து சென்று மதம்மாற்றுதல் தடுக்கபடும்
அப்படியும் ஏதும் எதிர்பாராமல் மதம் மாறுபவர்கள் சட்ட அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் முன்னிலையில்தான் மதம் மாறமுடியுமே தவிர தானாக மாறிவிட முடியாது,இது போன்ற சட்டத்தை முன்பு மறைந்த தமிழக முன்னால் முதல்வர் ஜெயலலிதா 2001-2006 அதிமுக ஆட்சி காலத்தில் தமிழகத்தில் அமல்படுத்தினார்.
இந்தியாவில் முதன் முதலில் மதமாற்ற தடைசட்டம் கொண்டுவரபட்ட மாநிலமாக அப்பொழுது தமிழகம்தான் அறியபட்டது. ஆனால் திடீரென பின்வாங்கிய ஜெயலலிதா அந்த சட்டத்தை ரத்து செய்தார்,ஆனால் தற்போது கர்நாடக அரசு மதமாற்றம் தடை சட்டத்தை அமல் படுத்தியுள்ளது. இந்த சட்டம் இந்தியா முழுவதும் அமல்படுத்துவதற்கான ஒரு முன்னோட்டமாக தான் பாஜக ஆளும் கர்நாடக மாநிலத்தில் மதமாற்றம் தடை சட்டம் அமல் படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது கர்நாடகாவில் சிலர் எதிர்ப்பு தெரிவித்தாலும், பெரும்பாலனோர் இதற்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், அடுத்தடுத்து பாஜக ஆளும் மாநிலங்களில் மதமாற்றம் தடை சட்டம் அமல்படுத்தப்பட்டு பின்பு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, குடியுரிமை சட்டம் என அதிரடி சட்டங்களை அமல் படுத்திய மத்திய பாஜக இந்தியா முழுவதும் மதமாற்றம் தடை சட்டம் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், அதற்கான முன்னோட்டம் தான் பாஜக ஆளும் கர்நடகாவில் மதம் மாற்றம் தடை சட்டம் அமல் படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுவது குறிப்பிடதக்கது.