ரூ 500 கோடிக்கு சரக்கு விற்பனை செய்ய முடியுமா.? சாத்தியமாக்கிய தமிழக அரசை பாராட்டி முக்கிய பிரமுகர்.!

0
Follow on Google News

நோய்த்தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது மதுக்கடைகளைத் திறந்து, சமூகத்தின், குடும்பங்களின் அமைதியைக் குலைக்கத் தயாராகும் குடியைக் கெடுக்கும் அதிமுக அரசுக்கு நம் எதிர்ப்பைக் காட்டுவோம். ‘கொரோனாவை ஒழிப்பதில் தோல்வி அடைந்துவிட்ட அ.தி.மு.க. அரசைக் கண்டிக்கிறோம்’ முழங்குவோம்” என எதிர்கட்சி தலைவராக இருந்த முக ஸ்டாலின் மதுக்கடையை கொரோனா காலத்தில் திறந்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த வருடம் கருப்பு சட்டை அணிவித்து போராட்டம் நடத்தினர்.

ஆனால் தற்போது கொரோனா இரண்டாம் அலை முதல் அலையை விட வீரியம் அதிகமாவும், வேகமாகவும் தொற்று பரவி வரும் இந்த சூழலில், கடந்த சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு தினங்களில் தமிழகம் முழுவதும் சுமார் ரூ.855 கோடி விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது, எதிர்க்கட்சியாக இருந்த திமுக மது கடைகளுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன் வைத்து தற்போது ஆட்சிக்கு வந்தபின்பு மது விற்பனையில் சாதனை படைத்து வருவது கடும் விமர்சனம் எழுந்துள்ளது.

முக ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்ற பின்பு கொரோனா தொற்று பரவல் காரணமாக மது கடைகள் காலை 8 மணி முதல் நண்பகல் 12 வரை மட்டும் இயங்கும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது, இதனை தொடர்ந்து மே 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பு அதற்கு முந்தைய சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் மதுக்கடைகளை அதிக நேரம் திறந்து வைத்து மது விற்பனையை அதிக படுத்தி சாதனை படைத்துள்ளது தமிழக அரசு.

இந்நிலையில் இது குறித்து பாஜக ஐடி பிரிவு தலைவர் CTR நிர்மல் குமார் தனது டிவீட்டர் பக்கத்தில் ஒரே நாளில் 500 கோடி சரக்கு வினியோகம் செய்ய முடியும் என நிருபித்த “சாராய அதிபர்கள்” மற்றும் இதை சாத்தியமாக்கிய “தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஆகியோர் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் என பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.