பேசு தமிழா பேசு என்கிற யு டுயூப் சேனலில் விடியல் வந்திடுச்சு என்கிற தலைப்பில் வெளியான வீடியோ ஓன்று சமூக வலைதளத்தில் மிகுந்த வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்த உடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம், பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூபாய் 5 குறைப்பு, என தேர்தல் வாக்குறுதிகளை மக்கள் மத்தியில் அள்ளிவீசிய திமுக ஆட்சிக்கு வந்த பின்பு இதில் எதையும் செய்யவில்லை.
இது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் அமைத்துள்ள விடியல் வந்திடுச்சு வீடியோவில், திமுக துண்டு போட்ட ஒருவரிடம் சாமானியன் கேள்வி கேட்பது போன்று அமைத்துள்ள அந்த வீடியோவில், ஸ்டெர்லைட் ஏன் திறந்தீர்கள் என்ற கேள்விக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக திறந்தோம், தற்போது ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இல்லை என்றாலும் ஸ்டெர்லைட் நிறுவனத்தை மூடுவதை விடுத்து டாஸ்மாக் கடைகளை மூடுவதில் பிசியாக இருக்கோம் என திமுக துண்டு போட்ட நபர் பதிலளிக்கிறார்.
சரி டாஸ்மாக் எப்ப மூடுவிங்க என கேள்விக்கு, டாஸ்மாக் கடையை முட்டுவது முக்கியமா.? ஏழு பேர் விடுதலை முக்கியமா.? என பதிலளிக்க, சரி எப்ப ஏழு தமிழர்களை விடுதலை செய்ய போறீங்க என கேள்விக்கு, பசங்க எதிர்காலம் கருதி நீட் தேர்வில் பிசியாக இருக்கோம், ஆனால் அதில் சட்டம் சிக்கல் இருப்பதால் மத்திய அரசுக்கு பதில் ஒன்றிய அரசு என உருட்டிக்கிட்டு பெட்ரோல்,டீசல் விலை ரூபாய் 5 குறைக்க போராடி வருகிறோம் என திமுக துண்டு போட்ட நபர் பதிலளிக்கிறார்.
சரி ஆட்சிக்கு பெட்ரோல் டீசல் விலையை எப்ப குறைப்பீர்கள் என கேள்விக்கு, அதில் பொருளாதார சிக்கல் இருப்பதாகவும், மேலும் கட்டணத்தை குறைக்கலாம் என்றால் மின் கம்பிகளில் அணில் ஓடி, ஓணான் ஓடி பல பிரச்சனைகளில் எப்படி சீரமைப்பது என்று பட்ஜெட் போட்டுக்கிட்டு இருக்கோம், ஆனால் அதற்குள் குடும்ப தலைவிகள் ரூபாய் 1000 கேட்கிறார்கள். இப்படி கேள்வி மேல் கேள்வி கேட்டால் பாசிச பாஜக உள்ளே வந்துவிடும் என் திமுக துண்டு போட்ட நபர் பதிலளிக்கிறார்.
சரி நீங்க ஆகமொத்தம் எதுவுமே செய்யமாட்டீக என கேள்வி கேட்கும் நபருக்கு, தான் போட்டிருந்த திமுக துண்டை எடுத்து அவருக்கு போட்டு, வாங்க ன்னே.. உங்களுக்கு செய்யாம வேறு யாருக்கு செய்ய போகிறோம் என அந்த துண்டின் ஒரு பகுதியை எடுத்து கேள்வி கேட்கும் நபர் வாயை மூடும்போது, நல்லா தான் மேடம் பேசுவான், வாழை பழம் மாதிரி பேசுவான், எப்பேர் பட்டவர்களுக்கும் விழுந்து விடுவார்கள் என்ற பின்னணி குரலுடன் முடியும் இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.