முன்பையில் இருந்து கோவா செல்லும் சொகுசு கப்பலில், சூதாட்டம், மது விருந்து, போதை பொருள் உட்கொண்டு மாடல் அழகிகளுடன் நடனம், என உல்லாச கப்பல் முன்பையில் இருந்து கோவா சென்று பிறகு அங்கிருந்து முன்பை திரும்பும், நடு கடலில் நடக்கும் இந்த நிகழ்வில் பங்கேற்க ஒரு நபருக்கு தலா 80 ஆயிரம் நுழைவு கட்டணம் என கூற படுகிறது, இதில் பெருபாலன பணக்கார வீட்டு பிள்ளைகள் கலந்து கொண்டு வருவது வழக்கம், இன்னும் சிலர் இந்த கப்பலை மொத்தமாக வாடகைக்கும் எடுப்பார்கள்.
இந்நிலையில் , மும்பையில் நடுக்கடலில் ஒரு சொகுசுக் கப்பலில் சிறப்பு விருந்துக்கு சிலர் ஏற்பாடு செய்திருப்பதாகவும் அங்கே போதை பொருள் பெருமளவில் விநியோகம் செய்ய தயார் நிலையில் இருப்பதாக போதை பொருள் கட்டுப்பாட்டு அமைப்பான நர்கோடிக்ஸ் கன்ட்ரோல் பீரோ ( என்.சி.பி.) என்று அழைக்கப்படும் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது, இதனை தொடர்ந்து, சுற்றுலா பயணிகள் போன்று அந்த சொகுசு கப்பலில் நடக்கும் போதை பார்ட்டியில் கலந்து கொள்ள மப்டியில் சென்றனர் போலீசார்.
இதனை தொடர்ந்து சம்பவம் நடந்தன்று அந்த சொகுசு கப்பல், மும்பையில் இருந்து கோவாவை நோக்கி பயணித்த சில நிமிடங்களில் அங்கே பார்ட்டி தொடங்கியுள்ளது, மது விருந்து, போதை பொருள் விநியோகம் என அங்கே தொடங்கிய பார்ட்டி சில நேரங்களில் அங்கே இருக்கும் மாடல் அழகிகளுடன் போதையில் ஆட்டம் போடா தொடங்கியுள்ளனர் அந்த பார்ட்டியில் கலந்து கொண்டவர்கள், இதை தீவிரமாக கண்காணித்து வந்துள்ளனர் அந்த கப்பலில் பயணித்த மப்டி போலீசார்.
அந்த கப்பலில் நடந்த பார்ட்டியில் சுமார் 23 வயது மதிக்க தக்க ஒரு இளைஞர்(ஷாருக்கான் மகன் அயூப் கான்) அங்கே இருந்த சுமார் 5 மாடல் அழகிகள் மத்தியில் போதையில் உல்லாச நடனம் ஆடுவதை அங்கிருந்த போலீசார் தீவிரமாக கண்கணித்துள்ளனர், உடன் வந்த நண்பர்கள் சுமார் 5 மாடல் அழகிகளுடன் நடனமாடும் தங்கள் நண்பர் ஷாருக் கான் மகன் அயூப் கான் நடனமாடுவதை சுற்றி நின்று கைதட்டி ஆரவாரம் செய்து வந்துள்ளனர்.
அப்போது ஒரு கட்டத்தில் அங்கே சுற்றலா பயணிகள் போன்று பயணம் செய்து கொண்டிருந்த போதைப்பொருட்கள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் போலீஸார் திடீரென அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் மது அருந்தியவர்கள் விடுவிக்கப்பட்டு, போதை பொருள் பயன்படுத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர், இதில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் மற்றும் அவரது நண்பர்கள் அர்பாஸ் மெர்சன்ட், மூன் மூன் தமேச்சா, நுபுர் சரிகா, இஸ்மித் சிங், மோஹக் ஜஸ்வால், விக்ரந்த் சோக்கர், கோமித் சோப்ரா ஆகியோர்தான் கைது செய்யப்பட்டவர்கள்.
இதனையடுத்து கைது செய்யப்படட்ட ஷாருக்கான் மகன் உட்பட 8 பேரை பிடித்து அவர்களிடம் இருந்த கோகைன் உள்ளிட்ட விலைமதிக்கத்தக்க போதை பொருளை பறிமுதல் போலீசார் செய்தனர். தற்போது ஷாருக்கான் மகன் ஆர்யன் கான், அவரது நண்பர்கள் அர்பாஸ் மெர்சன்ட், மூன்மூன் தபேச்சா உள்பட மூவரின் ஜாமீன் மனுக்கள் மட்டும் நிராகரிக்கப்பட்டு அவர்கள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டு விசாரணை மேற்கொன்டு வருவதால் இவர்களுக்கு போதை பொருள் எப்படி கிடைத்தது, மேலும் இவர்களுக்கும் போதை பொருள் கும்பலுக்கும் தொடர்பு ஏதும் இருக்கிறதா என தகவல் விசாரனையில் தெரியவரும் என எதிர்பார்க்க படுகிறது.