பிஜேபியின் பினாமியா தேர்தல் ஆணையம்? செந்தில் பாலாஜிக்காக கொதித்தெழுந்த ஜோதிமணி.!

0
Follow on Google News

தாராபுரம் அருகே மார்ச் 31ம் தேதி நடத்த திமுக பிரச்சாரத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாவது, அத்வானி, வெங்கையா நாயுடு உள்ளிட்ட பலரை ஓரங்கட்டிவிட்டு மோடி பிரதமரானார், அதுமட்டுமின்றி, அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் இருவரும் பிரதமர் மோடி கொடுத்த அழுத்தத்தைத் தாங்க முடியாமலேயே உயிரிழந்தனர் எனவும் கூறியுள்ளார். இது இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், உதயநிதியின் இந்தக் கருத்திற்கு மறைந்த அமைச்சர்கள் சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லியின் குடும்பத்தினர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். சுஷ்மா சுவராஜின் மகள் பன்சூரி சுவராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், “உதயநிதி தயவுசெய்து எனது தாய் குறித்துப் பேச வேண்டாம். நீங்கள் கூறியது அனைத்தும் பொய்யானவை.எனது தாயாருக்குப் பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த மரியாதையை வழங்கினார். எங்களது கஷ்ட காலத்தில் பிரதமர் மோடியும், பாஜகவும் துணைநின்றனர். உங்களின் கருத்து எங்களுக்கு வேதனை அளிக்கிறது” என தெரிவித்திருந்தார்

இந்நிலையில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தலைமையிலான குழு இந்திய தேர்தல் ஆணையத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக புகார் அளித்தனர். அதில் “பாஜகவின் மறைந்த தலைவர்களான சுஷ்மா சுவராஜ் , அருண் ஜெட்லி ஆகியோர் பிரதமர் மோடி கொடுத்த நெருக்கடியால் இறந்தனர் என திமுகவின் உதயநிதி ஸ்டாலின் பேசியது தவறான கருத்து மட்டுமல்ல, மக்களை திசை திருப்ப இது போன்ற அவதூறுகளை பேசியுள்ளார்.

தேர்தலுக்கு சற்றும் தொடர்பே இல்லாத அடிப்படையே இல்லாத, பொய்யான கருத்துக்களை பேசி பிரதமரின் தனிப்பட்ட வாழ்க்கையையும், மறைந்த முன்னாள் அமைச்சர்களையும் விமர்சித்துள்ளார், இது தேர்தல் விதிமுறை மீறல் ஆகும். எனவே அவரை தேர்தலில் நிற்காதபடி தகுதி நீக்கம் செய்ய வேண்டும்”. எனக் கோரப்பட்டிருந்தது. இந்த புகாரை பரிசீலித்த தேர்தல் ஆணையம் “தேர்தலுக்கு தொடர்பே இல்லாத தனிப்பட்ட நபர்கள் சம்பந்தப்பட்ட அவதூறு கருத்துக்களை தாராபுரத்தில் பிரச்சாரத்தின் போது உதயநிதி பேசியது தேர்தல் விதிமுறை மீறல் என்றும்.

எனவே இதுஇதுதொடர்பாக இன்று மாலை மாலை 5 மணிக்குள் விளக்கமளிக்க உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. விளக்கமளிக்க தவறும்பட்சத்தில் எந்த முன்னறிவிப்பும் இன்றி தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும்”. என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு குறித்து தனது டிவீட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, தனிமனித விமர்சனம் தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி தேர்தல் ஆணையம் உதயநிதிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆனால் செந்தில் பாலாஜியை தரக்குறைவாக வன்முறையை தூண்டும் விதத்தில் பேசிய அண்ணாமலைமீது நடவடிக்கை இல்லை. இது என்ன தேர்தல் ஆணையமா இல்லை பிஜேபியின் பினாமி ஆணையமா? என செந்தில் பாலாஜிக்காக கொதிதெழுத்துள்ளார் ஜோதிமணி எம்பி.