காரைக்குடியில் திருமணமான தம்பதிகளுக்கு நடைபெற்ற முதலிரவில் மனைவியிடம் கணவன் நடந்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, திருமண வைபோகம் நடந்து முடிந்து, அன்று மாலையே பொண்ணுக்கு கொடுக்க வேண்டிய சீர் வரிசைகளை கொடுத்துவிட்டு பெண்ணை மணமகன் இல்லத்தில் விட்டுவிட்டு பெண் வீட்டார் மணமகன் வீட்டாரிடம் தங்கள் பெண்ணை நன்றாக பார்த்துக்கங்க என தெரிவித்துவிட்டு திரும்பி சென்றனர்.
திருமணம் முடிந்த அன்று இரவு மணமக்களுக்கு முதலிரவு மணமகன் வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டது, மணமகள் சீதனமாக கொண்டு வந்த புதிய கட்டில் மெத்தை என அனைத்தையும் முதலிரவு நடக்கும் அறையில் பொருத்தி, மேலும் பெண்ணின் கையில் பால் சொம்புடன், முதலிரவு நடக்கும் அறைக்குள் புதுமண தம்பதியினர் இருவரையும் உள்ளே அனுப்பி வைக்கப்பட்டனர், கணவன் வெற்றி மனைவி சூர்யாவும் சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்தனர்.
அப்போது வெற்றி, மனைவி சூர்யாவிடம் உங்கள் வீட்டில் திருமணத்திற்கு முன்பு பணம் மற்றும் நகைகள் தருவதாக சென்றார்கள் ஆனால் சொன்னதில் பாதியை மட்டும் கொடுத்து ஏமாற்றி விட்டார்கள் என கேட்க, கணவன் மனைவி இருவருக்கும் சண்டை பற்றியது. இதனால் இருவருக்கும் வாக்குவாதம் முற்றி கணவன் வெற்றி கோபத்தில் என்னை திட்டமிட்டு உங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஏமாற்றி விட்டார்கள் என மனைவியை தாக்கியுள்ளார்.
ஒரு கட்டத்தில், தனது மனைவி சூர்யாவை அறையில் உள்ள பாத்ரூமில் தள்ளிவிட்டு தலைமுடியை வெட்டியுள்ளார், . தடுக்க முயற்சி செய்தும் மனைவி சூர்யாவால் முடியவில்லை. சூர்யா எதிர்பாராத நேரத்தில் கணவன் வெற்றி மறைத்து வைத்திருந்த மாத்திரையை மனைவி வாய்க்குள் திணிதுள்ளார்.. இதனால் சூர்யா மயக்கமடைய அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு மயக்கமாக இருந்த சூர்யா சுய நினைவுக்கு திரும்பியுள்ளார்.
இந்த சம்பத்துக்கு பின் வரதட்சணை கொடுத்தால் தான் சேர்ந்து வாழ முடியும் என்று வெற்றி பிடிவாதமாக இருந்ததால், வரதட்சணை கேட்ட வெற்றி மீது சக்கோட்டை காவல் நிலையத்திலும் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர். ஆனால் இரண்டு நாட்கள் கடந்தும் நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழித்து வந்ததை தொடர்ந்து புகார் டிஎஸ்பிக்கு கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு உடனடியாக விசாரணை நடைபெற்று வழக்கு பதிவு செய்யப்படுவதாக உறுதியளிக்கப்பட்டதாக கூறபடுகிறது.