சென்னையில் பட்டப்பகலில் சாலையில் நடந்து சென்ற கர்ப்பிணியிடம் பெண்ணிடம் தாலி செயினை பறிக்க முயன்ற கொள்ளையர்கள். சென்னை பல்லாவரம் பகுதி ரேணுகா நகரில் வசித்து வருகிறார் கீதா. இவர் 8மாத கர்ப்பிணி பெண். கீதா வீட்டு வாசலில் ஒரு விநாயகர் கோயில் ஒன்று உள்ளது. கீதா வாசலில் உள்ள விநாயகர் கோயிலில் சாமி கும்பிட சென்றார்.
சாமி கும்பிட்டு கொண்டிருக்கும் போது அந்த தெரு வழியாக டூவீலரில் வந்த இரண்டு வாலிப கொள்ளையர்கள், கர்ப்பிணியான கீதா வீட்டின் வெளியே நின்று சாமி கும்பிடுவதை பார்த்தவுடன், ஒருவன் டூவீலரில் அமர்ந்துகொள்ள உடன் வந்த இன்னொரு வாலிபர் மட்டும் இறங்கி நடந்து வந்தான். அருகில் வந்த ஒரு வாலிபர் கீதா அருகில் வந்து கழுத்தில் போட்டிருந்த தாலி செயினை பறிக்க முயன்றான்.
ஆனால் கீதாவோ தாலி செயினை இறுக்கமாக பிடித்துக் கொண்டு அந்த வாலிபரிடம் போராடி கொண்டு இருந்தார். அந்த வாலிபர் கீதாவிடமிருந்து தாலிச் செயினை பிடுங்க முடியாமல் திணறிக்கொண்டிருந்தான். திடீரென்று அந்த வாலிபன் கீதாவை தரதரவென இழுத்து வந்து சாலையில் நடுவே போட்டு செயினை பறிக்க முயன்றார். நீண்ட நேரம் போராடிய கீதா கடைசியாக சத்தம் எழுப்ப அருகில் இருப்பவர்கள் வர கொள்ளையர்கள் டூவீலரில் தப்பியோடிவிட்டனர்.
ஒரு வழியாக 11 சவரன் தாலிச் செயினை கொள்ளையர்களிடம் இருந்து பாதுகாத்துக் கொண்டார் கர்ப்பிணி கீதா. இதில் கர்ப்பிணி பெண்களுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளது. கர்ப்பிணி என்று கூட பார்க்காமல் செயினை கொள்ளை அடிக்க முயன்ற வாலிபர்களை பல்லாவரம் காவல்துறை வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காட்சியின் அடிப்படையில் விசாரித்து வருகின்றனர்.