நேற்று இரவு மதுரை தல்லாகுளம் உதவி ஆணையர், RSS தலைவர் மோகன் பகவத்தை தரக்குறைவான வார்த்தைகளல் பேசி பின் மன்னிப்பு கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நான்கு நாள் பயணமாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மதுரை வந்துள்ள நிலையில்.மதுரை சத்யசாய் நகரில் கட்டப்பட்டுள்ள சாய் பாபா ஆலய திறப்பு விழா மட்டுமின்றி ஏராளமான விழாக்கள், நிகழ்ச்சிகளில் மோகன் பகவத் பங்கேற்க இருக்கிறார்.
இதனால் மதுரையில் அவர் செல்லும் வழிகளில் உச்சகட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு தல்லாகுளம் பகுதியில் உள்ள ஓட்டல்களை விரைந்து மூடும்படி அங்கே வந்த மதுரை தல்லாகுளம் உதவி ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும் கோபத்துடன் சீக்கிரம் கடைய மூடுங்க, இந்த DC அங்க போ, இங்க போ என்கிறான், RSS தலைவர் வேற இங்க வந்த நம்ம உயிர வாங்குறான் என்று காவல்த்துறை உயர் அதிகாரிகளையும், RSS தலைவரையும் ஒருமையில் தரக்குறைவாக பேசியுள்ளார் மதுரை தல்லாகுளம் காவல் உதவி ஆணையர்.
இந்நிலையில் அங்கே அருகில் இருந்த பாஜக இளைஞரணி நிர்வாகி பிரவின் ராஜ், காவல் உதவி ஆணையரிடம் யாரை தரக்குறைவாக பேசுகிறீர்கள் என்று கேட்டுள்ளார் அதற்கு, அதான் டில்லியில் இருந்து RSS தலைவன் ஒருத்தன் வந்திருக்கானே அவனை தான் என்று உதவி ஆணையர் பதிலளிக்க, அதற்கு மாறியதையாக பேசுங்க, நாங்க பாஜக மற்றும் RSS இயக்கத்தை சேர்ந்தவர்கள் தான் என்று பிரவின் ராஜ் தெரிவிக்க அதற்கு மேலும் மோகன் பகவத்தை தரக்குறைவாக பேசியுள்ளார் உதவி ஆணையர்.
RSS தலைவர் மோகன் பகவத்தை பொது இடத்தில் தரக்குறைவான வார்த்தைகளில் விமர்ச்சித்த மதுரை தல்லாகுளம் உதவி ஆணையர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக இளைஞரணி நிர்வாகி பிரவின் ராஜ் தெரிவிக்க அதை பொருட்படுத்தாமல் அந்த இடத்தில் இருந்து செல்ல உதவி ஆணையர் முயன்ற போது, தனி ஒருவனாக உதவி ஆணையர் வாகனத்தை மறைந்து நடு ரோட்டில் அமர்ந்த பிரவின் ராஜ், உதவி ஆணையர் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையென்றால் கட்சியின் நிர்வாகிகளை அழைத்து போராட்டம் நடத்துவோம் என கோஷமிட்டார்.
இதனை தொடர்ந்து RSS தலைவர் மோகன் பகவத்தை பொது இடத்தில் தரக்குறைவான வார்த்தைகளில் பேசியதற்கு மதுரை தல்லாகுளம் உதவி ஆணையர் மன்னிப்பு கேட்டார். இந்த பரபரப்பு சம்பவம் தொடர்பான வீடியோ ஓன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் RSS தலைவர் மோகன் பகவத்தை தரக்குறைவான வார்த்தைகளில் பேசிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜகவினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.