மாரிதாஸ் பயம் இன்னும் விடல போல…? பின்ன அவர் சொருகுன ஆப்பு அப்படி.. கதறும் சீப்பு செந்தில்..!

0
Follow on Google News

நெறியாளர் செந்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார் அதில், பிரபல எழுத்தாளர் மாரிதாஸை மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திமுகவின் சொம்பா.? கோபம் வருகிறதா அப்படி கேட்டால், எங்கள கேட்டீங்களா சொம்பா.? கப்பா.? பக்கெடா.? வாலியா.? அப்படி எல்லாம் கேட்டீர்கள், ஏன் கலைஞர் டிவியில் வேலைக்கு சேரப்போகிறார், சன் டிவியில் வேலைக்கு சேரப்போகிறார் அப்படியெல்லாம் சொன்னீர்களே,

நெறியாளர் குணசேகரன் அவர்கள் சன் தொலைக்காட்சியில் வேலைக்கு சேர்ந்ததால் திமுகவின் சொம்பு என்று சொன்னீர்களே, இப்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அண்ணாத்தே திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கிறார் அப்படியானால் ரஜினிகாந்த் அவர்கள் திமுகவின் சொம்பு என்று சொன்னால் விட்டு விடுவீர்களா, எனக்கும் ஒரு வார்த்தை வருது, நாக்க மடிச்சுகிட்டு சொல்லாமயிருக்கேன், என மாரிதாஸ் போன்று நடித்து காண்பித்து மறைமுகமாக தாக்கி பேசியிருந்தார் மரித்தாஸ் வெளியிட்ட வீடியோவால் நியூஸ் 18 தொலைக்காட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட சீப்பு புகழ் செந்தில்.

இதற்கு வலைதளவாசிகள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர், முரசொலி விழாவில் ரஜினி கலந்து கொண்டபோது அவரை திமுக ஆளுன்னு சொல்லாத ஆட்கள் துக்ளக் நிகழ்ச்சில கலந்துகிட்டதும் பாஜக ஆளுன்னு சொல்லி ஒரு சாயம் பூச முயற்சிக்குறீங்க. அதையே திருப்பி உங்கமேல பூசும்போது உங்களுக்கு கோவம் வருது. எனக்கும் ஒரு வார்த்தை வருது, நாக்க மடிச்சுகிட்டு சொல்லாமயிருக்கேன். என்றும்,

மேலும் மாரிதாஸ் பயம் இன்னும் விடல போல…? பின்ன அவர் சொருகுன ஆப்பு அப்படி பட்டதாச்சே, தயாரிக்கிற படத்துல நடிக்குறதும், அவர்களின் கட்சி சார்ந்து நடத்தும் செய்தி தொலைகாட்சியில் வேலை பார்ப்பதும் ஒன்றா சன் மற்றும் கலைஞர் டிவியிலை வேலை பார்த்து திமுகவின் தவறையோ அல்லது பாஜாக செய்த நல்லதை செய்தியாக சொல்ல முடியுமா? பதில் சொல்லுங்கள் அண்ணா.என பதில் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.