அந்த லேமன் பிரதர்ஸ்……தற்பெருமை பேசிய PTR தியாகராஜனுக்கு தக்க பதிலடி கொடுத்த அண்ணாமலை.!

0
Follow on Google News

தமிழக நிதியமைச்சர் PTR தியாகராஜன் தொடர்ந்து தற்பெருமை பேசி வரக்கூடியவர், மேலும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகின்றவர். நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் முடிவுக்கு பின் திமுக அமைச்சரைவையில் இடம் பெற்ற அமைச்சர்களில் தனது பேச்சின் காரணமாக அதிக சர்ச்சைகளில் சிக்கி வரக்கூடியவர் நிதியமைச்சர் PTR தியாகராஜன். அந்த வகையில் தற்போது அவரின் கருத்து தற்போது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனது சமூக வலைதள பக்கத்தில் PTR தியாகராஜன், நான் பொது வாழ்க்கைக்கு தாமதமாக வந்தேன், நான் ஏற்கனவே போதுமான அளவு சாதித்த பிறகு, ஒரு வெளிநாட்டவராக என் குடும்பத்திற்கு பல வகையில் உதவி செய்துள்ளேன். நான் என் முன்னோர்களைப் பின்தொடர்ந்து திரும்பி வந்து தேவைப்படுபவர்களுக்கு உதவ முயற்சித்தேன். எனவே முதல்வர் முக ஸ்டாலின் அரசாங்கத்தில் அமைச்சராக இருப்பதற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில் பழனிவேல் தியாகராஜன் அமெரிக்காவில் புகழ் பெற்ற லெமன் பிரதர்ஸ் நிறுவனத்தில் வேலை செய்ததாகவும், பின் அந்த நிறுவனம் பெரும் நட்டம் ஏற்பட்டு இழுத்து மூட பட்டதாக சமூக வலைத்தளத்தில் பரவலாக செய்திகள் பரவி வருகிறது. அந்த வகையில் வலைத்தளவாசி ஒருவர், தான் ஏற்கனவே போதுமான அளவு சாதித்து விட்டதாக பழனிவேல் தியாகராஜன் பதிவுக்கு லெமன் பிரதர் நிறுவனத்தை சுட்டி கட்டி நகைச்சுவையாக பதில் கொடுத்திருந்தார்.

இதற்கு பதில் அளித்துள்ள பழனிவேல் தியாகராஜன், லெமன் பிரதர் நிறுவனம் குறித்து எந்த ஒரு பதிலும் அளிக்காமல். நண்பா … நான் உன்னை விட மிக பெரியவன் நான். (உங்களைப் போன்ற பொய் சொல்லும் கசடுகளின் நுண்ணிய அளவை என்னால் அகற்ற முடியும். உங்களிடம் இரண்டு சவால்கள். ஓன்று உங்களை விட 10 மடங்கு சிறந்த தொழில் கொண்ட குறைந்தது 100 பேருக்கு நான் வழிகாட்டினேன். இரண்டாவது, உங்கள் வாழ்க்கையில் நீங்கள் வேலை செய்வதை விட நான் 100மடங்கு அளவிலான செயல்பாட்டை இயக்கினேன். அதை நிருபிக்க வேண்டுமா? என பதிலளித்திருந்தார்.

பழனிவேல் தியாகராஜன் இந்த பதில், மீண்டும் அவர் தன்னை பற்றி தற்பெருமை பேசுவது போன்று அமைந்துள்ளதாக பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைதள பக்கத்தில், நமது மாநிலத்தின் நிதி அமைச்சர் ஒரு சாதாரண மனிதனுக்கு பதிலளித்துள்ளார், நாம் உட்கார்ந்திருக்கும் நிலைகள் நம் கடந்த காலத்தைப் பற்றி மகிழ்ச்சியடைய தக்க கோபுரங்கள் அல்ல, ஆனால் ஒரு சாதாரண மனிதனுக்கு சேவை செய்யும் பொறுப்புணர்வு நிறைந்த இடம். நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளார்.