திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது, சமூக வலைதளத்தில் திமுகவை தொடர்ந்து விமர்சனம் செய்து வந்த மாரிதாஸ் , கிஷோர் கே சாமி போன்றவர்கள் திமுக ஆட்சி அமைந்ததும் கைது செய்து சிறையில் அடைக்கப்படுவார்கள் என திமுகவை சேர்ந்தவர்களே பகிரங்கமாக தெரிவித்து வந்த நிலையில், திமுக ஆட்சிக்கு வந்த பின்பு சமூக வலைதளத்தில் திமுகவுக்கு எதிராக விமர்சனம் செய்பவர்கள் குறி வைத்து கைது செய்யப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் கிஷோர் கே சாமி கைது செய்யப்பட்டு குண்டாஸ் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார், அவரை தொடர்ந்து கல்யாண ராமன் குண்டாஸ் சட்டத்தில் கைது செய்யப்பட்டார், இந்நிலையில் திமுகவுக்கு பெரும் சவாலாக இருந்து வந்த மாரிதாஸை கைது செய்வதில் தீவிரமாக இருந்த திமுக அரசு அவரையும் கைது செய்து சிறையில் அடைத்தது, தொடர்ந்து நமது தினசேவல் நியூஸ் எடிட்டர் K.K உட்பட சுமார் 24 பாஜகவினர் மீது திமுக அரசு ஆட்சிக்கு வந்த பின்பு எப்ஐஆர் பதிவு செய்துள்ளது.
இந்நிலையில் உச்சகட்டமாக மாரிதாஸ் கைது தமிழக பாஜகவுக்கு விடுத்த சவாலாக பார்க்கப்பட்டு களத்தில் இறங்கினர் முன்னால் IPS அதிகாரியும் தற்போதைய தமிழக பாஜக தலைவருமான அண்ணாமலை, இவர் சட்டம் தெரிந்த முன்னால் IPS அதிகாரி என்பதால் தமிழக காவல்துறையின் நடவடிக்கை தவறானது என சுட்டி காட்டியவர், 17 மாநிலங்களில் பாஜக ஆட்சி செய்கிறது CRPC மூலம் வேறு ஒரு மாநிலத்தில் வழக்கு பதிவு செய்து தமிழகத்தில் தவறாக பதிவு செய்பவர்கள் கைது செய்யப்படலாம் என அவர் கொடுத்த எச்சரிக்கையில் ஆட்டம் கண்டது திமுக அரசு.
மேலும் இந்த எச்சரிக்கையை தொடர்ந்து அடுத்த நாளே, தமிழக ஆளுநர் ஆர்என் ரவியை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அப்போது அவர், பாஜக ஆதரவாளர்களையும், பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாகச் செயல்படுபவர்களையும் பொய் வழக்குப் போட்டு கைது செய்யும் திமுக அரசைக் கண்டித்தும், தேச இறையாண்மைக்கு எதிராகவும், முப்படை தளபதி பிபின் ராவத் மரணத்தைக் கொச்சைப் படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் மனு அளித்தார்.
இதனை தொடர்ந்து மாரிதாஸ் மீது குண்டாஸ் சட்டம் போடுவதில் தீவிரமாக இருந்த திமுக அரசு பின் வாங்க தொடங்கியது, இதன் பின்பு திமுகவுக்கு தக்க பாடம் புகட்ட மேலும் தொடர்ந்து பாஜகவினர் கைது செய்யபட்டு வருவதற்க்கு முற்று புள்ளி வைக்க சட்ட ரீதியான நடவடிக்கையில் இறங்கிய அண்ணாமலையின் திரைமறைவு வேலைகள் திமுக தலைமையின் கவனத்துக்கு செல்ல, தானாக போய் அண்ணாமலை விரித்த வலையில் மாட்டினால் மிக பெரிய சிக்கலை சந்திக்க நேரிடும் என முக்கிய புள்ளிகள் திமுக தலைமையை எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து மாரிதாஸ், கிஷோர் கே சாமி மற்றும் கன்னியாகுமரியில் கைது செய்யப்பட்ட சிபின் ஆகியோர் வழக்கு விசரணைக்கு வந்த போது திமுக தலைமை உத்தரவின் பேரில் அரசு தரப்பில் பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவிக்காமல் ஜகா வாங்கியதாக கூறப்படுகிறது, இதனை தொடர்ந்து சிபின், மாரிதாஸ்,மற்றும் கிஷோர் கே சாமி ஆகியோர் அடுத்தடுத்து விடுதலையாகி உள்ளனர்.
இதனை தொடர்ந்து கல்யாண ராமன் விரைவில் விடுதலையாவார் என அண்ணாமலை தெரிவித்துள்ள நிலையில். பாஜகவினர் மற்றும் பாஜக ஆதரவாளர்கள் மீது திமுக கைது நடவடிக்கையில் இருபத்து, அண்ணாமலையின் அதிரடி ஆட்டத்தில் பாஜகவினருக்கு புதிய உத்வேகத்தையும், திமுக தரப்பில் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்கின்றனர் அரசியல் விமர்சகர்.