ஏப்.6ம் தேதி நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம், புதுச்சேரியில் தேர்தல் பிரச்சாரத்திற்காக நேற்று முன்தினம் சென்னை வந்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. காலை 10.30மணி அளவில் புதுச்சேரியில் நடைபெற்ற பிரச்சாரத்தில் கலந்து கொண்டார். இதற்கு முன்பு இங்கு நடைபெற்ற காங். ஆட்சி, மத்திய அரசு கொடுத்த ₹.1,500 கோடியை நாராயணசாமி மக்களுக்கு கொடுக்காமல் டெல்லியில் உள்ள காந்தி குடும்பத்திற்கு வழங்கினார், என்று காங்கிரசை பகிரங்கமாக விமர்சித்தார் அமித்ஷா.
பிறகு விழுப்புரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். உலகின் தலைசிறந்த மொழி தமிழிலில் பேச முடியாதது வருத்தம் அளிக்கிறது. 2G,3G,4G என கொள்ளை அடிக்கும் திமுக காங்கிரஸ் என கடுமையாக விமர்சித்தார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போன்று பேசிக் காட்டி கூட்டத்தில் சிறிது நேரம் கலகலப்பை ஏற்படுத்தினார் அமித்ஷா.
விழுப்புரம் – சென்னை நெடுஞ்சாலையில் சாலையோரம் உள்ள ஒரு இயற்கை உணவகத்தில் தமிழக பாஜக தலைவர் எல் முருகன் மற்றும் தேர்தல் பொறுப்பாளர்கள் உடன் அமர்ந்து உணவு அருந்தினார் அமித்ஷா நேற்று இரவு நட்சத்திர ஹோட்டலில் அமித்ஷா தலைமையில் அதிமுக-பாஜக இடையே கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில் தமிழக முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், எம்.பி. ரவீந்திரன், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் இணை அமைச்சர் கிசான் ரெட்டி, முன்னால் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், சி.டி. ரவி, தமிழக பாஜக தலைவர் எல். முருகன் சந்திப்பு நடைபெற்றது. நீண்ட நேரம் நடைபெற்ற கூட்டத்தில் பாஜகவுக்கு 33 சீட் வரை உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த இரண்டு நாளுக்குள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.