தமிழக அரசியல் கட்சிகள் இதுவரை தொடாத உச்சத்தை தொட்டு சுமார் 1 மில்லியன் பின்தொடர்பாளர்களை கொண்டு மிக பெரிய சாதனையை படைத்துள்ளது தமிழக பாஜக அதிகாரப்பூர்வ முக நூல் பக்கம். கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன், தமிழக முழுவதும் மோடி எதிர்ப்பு, பாஜக எதிப்பு என எதிர்கட்சிகளால் திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டு ஒரு போலி பிம்பம் உருவாக்கப்பட்டிருந்த கால கட்டத்தில் தமிழக பாஜக ஐடி பிரிவு மாநில தலைவராக நியமிக்கப்பட்டவர் CTR நிர்மல் குமார்.
மதுரை அருகே உள்ள உசிலம்பட்டியில் பிறந்த நிர்மல் குமார், விருதுநகரில் பள்ளி படிப்பையும், பொறியியல் பட்ட படிப்பை சென்னையிலும் படித்து, ஐடி துறையில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர், இவர் தமிழக பாஜக ஐடி பிரிவு தலைவராக நியமிக்கப்பட்ட பின், இதற்கு முன் பிரதமர் மோடி தமிழகம் வரும்போது சமூக வலைத்தளத்தில் GoBackModi என ட்ரெண்ட் செய்யப்பட்ட காலம் மாறி, Welcom Modi என இந்தியா அளவில் ட்ரெண்டிங்கில் முதல் இடம் பிடிக்க தொடங்கியது.
திமுக ஐடி பிரிவு செயலாளர் PTR பழனிவேல் தியாகராஜன் மிகப்பெரிய கட்டமைப்புடன் திமுக ஐடி விங் இருப்பதாக பில்டப் கொடுத்து, தான் அமெரிக்காவில் பல பட்டப்படிப்பு படித்தவர், பெரும் நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் வேலை செய்த அனுபவம் உண்டு ஆகையால் திமுக ஐடி விங் செயல்பாடுகளை எதிர் கொள்ள தமிழகத்தில் எந்த ஒரு அரசியல் கட்சியாலும் முடியாது என்ற ஒரு தோற்றத்தை தனது ஐடி விங் நிர்வாகி மூலம் உருவாக்கி வைத்திருந்தார்.
ஆனால், ஸ்டாலின் மிசா கைது குறித்த சர்ச்சை, முரசொலி அலுவலகம் மூலபத்திரம் குறித்த சர்ச்சை என பெரும் சிக்கலின் ஸ்டாலின் மற்றும் திமுகவும் சிக்கி தவிக்க என்ன செய்வதென தெரியாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது திமுக ஐடி பிரிவு, இதனை தொடர்ந்து திமுக ஐடி பிரிவு செயலாளர் PTR பழனிவேல் தியாகராஜனை நம்பி பயனில்லை என உணர்ந்த முக ஸ்டாலின், பிகாரில் இருந்து பெரும் தொகையை செலவு செய்து திமுகவுக்கு பணியாற்ற பிரசாந்த் கிஷோரை இறக்குமதி செய்து PTR பழனிவேல் தியாகராஜனை ஓரம் கட்டினார்.
அதே நேரத்தில் கடந்தநாடாளுமன்ற தேர்தலுக்கு பின் தமிழகத்தில் பாஜக செல்வாக்கு கிடு கிடுவென உயர்ந்து, பாஜக எதிப்பு அலை தற்போது பாஜக ஆதரவு அலையாக மாறி வருகிறது, மேலும் அதிமுக, திமுக ஆகிய காட்சிகளை விட அதிக பின்தொடர்பாளர்களை கொண்டு தமிழகத்தில் முதல் இடத்தில் பாஜக முகநூல் பக்கம் உள்ளது, பாஜக ஐடி பிரிவு மாநில தலைவராக CTR நிர்மல் குமார் நியமிக்கப்பட்ட நேரத்தில் தமிழக பாஜக முகநூல் பாகத்தை 6 லட்சம் நபர்கள் பின்தொடர்ந்த நிலையில் கடந்த ஒன்றரை வருடத்தில் கூடுதலாக சுமார் 4 லட்சம் நபர்கள் தமிழக பாஜக முகநூல் பக்கத்தை பின்தொடர்ந்து, சுமார் ஒரு மில்லியனை கடந்து சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவில் பெரும் பட்ட படிப்பு படித்து பெரும் நிறுவனத்தில் வேலை செய்ததாக தம்பட்டம் அடிக்கும் PTR பழனிவேல் தியாகராஜன், உசிலம்பட்டியை சேர்ந்த CTR நிர்மல்குமார் என்கிற இளைஞனிடம் மண்ணை கவ்வியதை தொடர்ந்து, திமுக முக்கிய நிர்வாகிகள் இந்த அமெரிக்க தம்பி அரசியல் தமிழகத்தில் எடுபடவில்லை என புலம்பி வருவது குறிப்பிடத்தக்கது.