மதுரை மாவட்டத்தில் உள்ள பத்து தொகுதிகளில் 7 தொகுதிகளில் அதிமுக வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றது, ஏற்கனவே மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் 8 தொகுதிகள் அதிமுகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்து வருகின்றனர், தற்போது மதுரை மாவட்டத்துக்கு உட்பட்ட 10 தொகுதிகளில் 7 தொகுதிகள் அதிமுக கைப்பற்றும் என கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளது.
மதுரை மாவட்டத்துக்கு உட்பட்ட, மேலூர், மதுரை கிழக்கு , சோழவந்தான், மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மத்தி, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம், திருமங்கலம், உசிலப்பட்டி, ஆகிய 10 தொகுதிகளில் மதுரை மத்திய தொகுதி மற்றும் மதுரை கிழக்கு தொகுதி ஆகிய இரண்டு தொகுதிகளில் மட்டும் திமுக கடந்த 2016 தேர்தலில் வெற்றி பெற்றது மற்ற 8 தொகுதிகளில் அதிமுக கைப்பற்றியது, இதில் மதுரை மத்திய தொகுதியில் மீண்டும் திமுக சார்பில் போட்டியிடும் PTR பழனிவேல் தியாகராஜன் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதே போன்று மேலூர், மதுரை மேற்கு,மதுரை தெற்கு, திருமங்கலம், சோழவந்தான் ஆகிய 5 தொகுதிகளில் கடந்த 2016 தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வெற்றி பெற்றவர்கள் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகின்றனர், இவர்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதால் மீண்டும் இந்த 5 தொகுதிகளில் அதிமுக வெற்றி வாய்ப்புகள் அதிகம் என கருத்து கணிப்புகள் உறுதி படுத்தியுள்ளது, இதே போன்று அதிமுக வசம் உள்ள உசிலம்பட்டி தொகுதியை இம்முறை திமுக கைப்பற்றுகிறது.
மேலும் திமுக கைவசம் உள்ள மதுரை கிழக்கு தொகுதி நிலவரம் அதிமுகவுக்கு ஆதரவாக உள்ளது, இந்த தொகுதியில் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதும், இது அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் என கூறப்பட்டு வந்த நிலையில் திமுக மீண்டும் வெற்றி பெரும் என கள நிலவரம் இருந்தது, ஆனால் அதிமுக முன்னால் எம்பி கோபாலகிருஷ்ணன் இந்த தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின் கடும் போட்டியை ஏற்படுத்தியது.
இதன் பின்பு தொடர்ந்து அதிமுக தீவிர பிரச்சாரத்துக்கு பின் மதுரை கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் கோபால கிருஷ்னன் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளது, இந்நிலையில் மதுரை மாவட்டத்துக்குட்பட்ட 10 சட்டசபை தொகுதிகளில் 7 தொகுதிகள் அதிமுக கூட்டணியும், 2 தொகுதிகள் திமுக கூட்டணியும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாக கருத்து கணிப்புகள் உறுதி செய்துள்ளது.1 தொகுதி இழுபறியில் உள்ளது.