மதுரை கிழக்கு தொகுதியில் வலுவான வேட்பாளரை இறக்கிய அதிமுக.! தாக்கு பிடிப்பாரா திமுக எம்.எல்.ஏ மூர்த்தி.!

0
Follow on Google News

வரும் சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை அதிமுக தலைமை அதிகாரப்பூர்வமாக இன்று வெளியிட்டுள்ளது, பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட 20 தொகுதிகளும், பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட 23 தொகுதிகளில் எந்தந்த தொகுதிகள் என்பது குறித்த அறிவிப்பும் இன்று வெளியாகி உள்ளது, ஆனால் பாஜக மற்றும் பாமக போட்டியிடும் தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல் இதுவரை வெளியாகாத நிலையில், அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் மதுரை கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ முத்திக்கு எதிராக முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணனை அதிமுக களம் இறங்கியுள்ளது மீண்டும் மதுரை கிழக்கு தொகுதியை திமுக கைப்பற்றுவது கேள்வி குறியாக உள்ளது, மதுரை கிழக்கு தொகுதியில் 40 சதவிகிதம் மேல் யாதவ சமூக மக்கள் இருக்கின்றனர், ஏற்கனவே யாதவ சமூகத்துக்கு சொந்தமான அறக்கட்டளை நிலத்தை அபகரித்ததாக திமுக எம்.எல்.ஏ மூர்த்திக்கு எதிராக யாதவ சமூக மக்கள் கடும் கோவத்தில் இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் அதே யாதவ சமூகத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணனை மதுரை கிழக்கு தொகுதியில் போட்டியிட அதிமுக வாய்ப்பு வழங்கியிருப்பது திமுகவுக்கு கடும் சவாலாக அமைத்துள்ளது. ஏற்கனவே ஐ-பேக் நிறுவனம் நடத்திய ஆய்வில் தற்போது இருக்கும் திமுக எம்.எல்.ஏ மூர்த்திக்கு எதிராக தொகுதி மக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் இருப்பதாக திமுக தலைமைக்கு ரிப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

இதனை தொடர்ந்து சமீபத்தில் வெளியான திமுக உத்வேச வேட்பாளர் பட்டியலில் மதுரை கிழக்கு தொகுதியில் மூர்த்தி பெயர் இடம் பெறவில்லை அவருக்கு பதில் வேறு ஒருவர் பெயர் இடப்பெற்றிருந்தது, ஆனால் தனது அதிகாரத்தை பயன்படுத்தி மீண்டும் திமுக சார்பில் மதுரை கிழக்கு தொகுதியில் போட்டியிட காய்களை நகர்த்தி வந்தார் மூர்த்தி, இதனால் எப்படியும் மூர்த்தி மீண்டும் மதுரை கிழக்கு தொகுதியில் போட்டியிடுவார் என கூறப்பட்டு வந்தது.

ஆனால் இன்று வெளியான அதிமுக வேட்பாளர் பட்டியலில் மதுரை கிழக்கு தொகுதியில் கோபாலகிருஷ்ணன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது, ஏற்கனவே மதுரை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த கோபாலகிருஷ்ணன் மக்கள் மத்தியில் நற்பெயரை பெற்றிருந்தவர்,மீண்டும் அவருக்கே மதுரை நாடாளுன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுத்திருந்தால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்ததாக கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் தெரிவித்திருந்தது.

ஆனால் அவர் மீண்டும் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடவில்லை,தற்போது மதுரை கிழக்கு தொகுதியில் அவரை களம் இறக்கியுள்ளது அதிமுக, இந்நிலையில் வலுவான வேட்பாளரை அதிமுக இறங்கியுள்ளது திமுகவுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது, இந்நிலையில் திமுக எம்.எல்.ஏ மூர்த்திக்கு கட்சி நிர்வாகி மற்றும் பொது மக்கள் மத்தியில் நற்பெயர் இல்லை என்றாலும் தனது அதிகாரத்தை பயன்படுத்தி மீண்டும் போட்டியிட சீட் பெற்றுவிடுவார் என கூறப்படுகிறது.