மதுரை மாவட்டத்தில் உறுதி செய்யப்பட்ட அதிமுக போட்டியிடும் தொகுதிகள்.! இந்த தொகுதிகளை மட்டும் விட்டு கொடுக்கமுடியாது அதிமுக திட்டவட்டம்.!

0
Follow on Google News

மதுரை மாவட்டத்தில் மொத்தம் பத்து சட்டமன்ற தொகுதிகள் உள்ளது, அதில் உசிலம்பட்டி, திருமங்கலம், சோழவந்தான், மேலூர், மதுரை தெற்கு, மதுரை மேற்கு, மதுரை வடக்கு ஆகிய ஏழு தொகுதிகளில் அதிமுக எம்.எல்.ஏ,வும், மதுரை கிழக்கு, மதுரை மத்தி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளில் திமுக எம்.எல்.ஏ கள் உள்ளன, இதில் மதுரை மத்திய தொகுதியில் தற்போது எம்.எல்.ஏ வாக உள்ள PTR தியாகராஜன், மற்றும் மதுரையில் கிழக்கு தொகுதியில் எம் எல் ஏ வாக உள்ள மூர்த்தி ஆகிய இருவருக்கும் மட்டும் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது, மற்ற தொகுதிகள் யாருக்கு என இதுவரை திமுகவில் இருந்து உறுதியான தகவல் இல்லை.

இந்நிலையில்,மதுரை மாவட்டத்தில் உள்ள குறிப்பிட்ட இந்த தொகுதிகளை அதிமுக தக்கவைத்து கொண்டுள்ளது, எந்த ஒரு காரணத்துக்காக இந்த தொகுதிகளை மட்டும் கூட்டணி கட்சிகளுக்கு விட்டு கொடுக்க கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது அதிமுக, மேலும் கூட்டணி பேச்சுவார்த்தையில் போது இந்த குறிப்பிட்ட தொகுதிகள் இடம்பெறாது என்பதை அதிமுக உறுதி செய்து தேர்தல் பணியை தீவிரப்படுத்தியுள்ளது.

அதில் அமைச்சர் தொகுதி இரண்டு உட்பட மொத்தம் ஐந்து தொகுதிகள் அடங்கும், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தற்போது எம்.எல்.ஏ வாக இருக்கும் திருமங்கலம் தொகுதியில் மீண்டும் அவரே போட்டியிடுவார் என்பதில் துளி அளவும் சந்தேகம் இல்லை என்பது போல் உறுதி செய்யப்பட்டுள்ளது, அதே போன்று அமைச்சர் செல்லூர் ராஜு எம்.எல்.ஏ வாக இருக்கும் மதுரை மேற்கு தொகுதி மீண்டும் அவருக்கே உறுதி செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் தனி தொகுதியான சோழவந்தான் தொகுதியில் மீண்டும் தற்போது எம்.எல்.ஏ வாக இருக்கும் மாணிக்கம் போட்டியிடுவது உறுதி செய்யபப்ட்டுள்ளது, அதே போன்று மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ வாக இருக்கும் மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா இம்முறை திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடுகிறார், அவர் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பே திருப்பரங்குன்றம் தொகுதியில் தேர்தல் பணியை தொடங்கிவிட்டார்.

அதே போன்று மதுரை தெற்கு தொகுதியில் தற்போது எம்.எல்.ஏ வாக இருக்கும் சரவணன் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது, மேலும் மதுரை தெற்கு தொகுதியில் சவுராஷ்டிரா சமூக ஒட்டு பெருமளவில் இருப்பதால் அதே சமூகத்தை சேர்ந்த சரவணன் மீண்டும் மதுரை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார், தமிழக முழுவதும் உள்ள சட்டசபை தொகுதிகளில் சௌராஷ்டிர சமூகத்துக்கு ஒரு தொகுதியாவது ஒதுக்கவேண்டும் என்கிற கட்டாயத்தில் அதிமுக இருப்பதால் சரவணன் மதுரை தெற்கு தொகுதியில் போட்டியிடுவதில் எந்த ஒரு சந்தேகமின்றி உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் உள்ள ஒரே ஒரு சௌராஷ்டிர சமூகத்தை சேர்ந்த எம்.எல்.ஏ வான சரவணனுக்கு அதிமுக சார்பில் தொகுதி ஒதுக்கப்படவில்லை என்றால் அது தமிழகம் முழுவதும் உள்ள சௌராஷ்டிர சமூக மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்படும் என்பதால் மீண்டும் மதுரை தெற்கு தொகுதியில் சரவணன் போட்டியிடுகிறார், மேலும் கடந்த ஐந்து வருடத்தில் தொகுதி வளர்ச்சிக்காக பல திட்டங்களை செயல்படுத்தி மக்கள் மத்தியில் நற்பெயரை சரவணன் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது, ஆகையால் மேற்கண்ட ஐந்து தொகுதிகளை அதிமுக போட்டியிடுவது உறுதி செய்யபப்ட்டுள்ளது.

மதுரையில் உள்ள மற்ற தொகுதிகளான உசிலம்பட்டி, மேலூர், மதுரை வடக்கு, மதுரை கிழக்கு,மதுரை மத்தி ஆகிய ஐந்து தொகுதிகளில் மதுரை வடக்கு மற்றும் மதுரை கிழக்கு தொகுதியை எதிர்பார்த்து பாஜக காய்களை நகர்த்தி வருகிறது, மதுரை மத்திய தொகுதியை தேமுதிகவுக்கு ஒதுக்கப்படலாம் என்றும், உசிலப்பட்டி மற்றும் மேலூர் தொகுதியில் மீண்டும் அதிமுக போட்டியிடும் என கூறப்படுகிறது.மேலும் இது போன்ற செய்திகளை உங்கள் வாட்ஸாப் செயலில் பெற 8925154074 என்ற எண்ணிற்கு “ACT NEWS” என்று மெசேஜ் செய்யவும் .